பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அன்னக்கிளி

 'அரசுக்கும் காட்டுக்கும் துரோகம் இழைத்து வந்த திருமாறனைச் சிறை எடுக்கவேண்டும். அவன் வீடு நோக்கிச் செல்வோம்’ என்றான் திருமலை.

'அவன் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காக வீட்டைச் சுற்றிலும் காவல் காக்கும்படி நமது வீரர்களை ஏவியிருக்கிறேன்’ என்று மருது அறிவித்தான்.

'நன்றே செய்தாய் நண்ப!’ என்று திருமலை பாராட்டுரை வழங்கி முடித்தபோது, ஒரு ஆள் ஓடிவந்து சேதி சொன்னான்.

அவரது ஆள் ஒருவன் மூலம் முன்னதாகவே எல்லா விவரங்களையும் திருமாறன் தெரிந்து கொண்டார். உயிரோடு சிறைப்பட்டு அவமானப்படுவதைக் காட்டிலும் இறந்துவிடுவதே மேல் என்று அவர் தீர்மானித்துவிட்டார். மோதிரத்தில் உள்ள வைரக் கல்லைத் துாள்செய்து விழுங்கி விட்டதாகத் தெரிகிறது. மிகுந்த வேதனையோடு உயிர் துறந்தார் அவர் என்று அவன் கூறினன்.

'மருது, எப்படியும் தப்பிவிட முடியும் என்று காட்டி விட்டான் திருமாறன். அவன் ஒழிந்தது நல்லதே!’ என்றான் திருமலை.

எல்லோரையும் அவரவர் கடமைகளைக் கவனிக்க அனுப்பிவிட்டு திருமலைக்கொழுந்து அன்னக்கிளியோடு அமுதவல்லியின் இல்லம் சேர்ந்தான். மருதுபாண்டியனும் அவனைத் தொடர்ந்தான்.

திருமலைக்கொழுந்துதான் மதுரைப் பாண்டியனின் இளவல் என்பதும், இதர விவரங்களும் அமுதவல்லிக்கு