பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

115

எட்டியிருந்தன. அவள் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்கக் காத்திருந்தாள். அவளே முந்திக்கொண்டாள்.

‘அன்னம், நீ என்னிடம் சொல்லாமல் எங்கே போய் விட்டாய்? உன்னே எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா? உனக்கு எனது வாழ்த்தாகவும் திருமணத்திற்காக என் அன்பளிப்பாகவும் முத்து மாலையை உன் கழுத்தில் என் கைகளாலேயே பூட்டிவிட விரும்புகிறேன். மாலை என் அறையில் படுக்கைக்குக் கீழே விழுத்து கிடந்தது. நமது பூனைதான் அதைத் தேடிக்கொடுத்தது’ என்று கூறி, அமுதவல்லி கைகொட்டி கலகலத்தாள்.

அன்னக்கிளியின் உள்ளத்தில் இப்போது துயரத்தின் சிறு அனுகூட இல்லை. அவளே இன்பத்தின், மகிழ்ச்சியின், அழகின் பூரண உருவமாகி விட்டதுபோல் விளங்கினாள்,

அவள் அழகை அள்ளிப்பருகுவதில் அலுப்புகாணவேயில்லை திருமலையின் விழிகள்!