பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

9

அமுதவல்லியிடம் அழகு இருந்தது; அறிவு இருந்தது; செல்வம் இருந்தது; அந்தஸ்து இருந்தது. வாழ்க்கையை, அது தரக்கூடிய சுகபோகங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் அதிகமாகவே இருந்தது. அதனால் அவள் புகழ் எங்கும் பரவியிருந்தது.

அமுதவல்லி வஞ்சக எண்ணத்தோடு வலைவீசிச் செல்பவர்களைக் கவர்ந்து இன்பமும் பணமும் பறிக்கத் திட்டமிடும் வஞ்சியல்ல. சகல பேர்களுடனும் சரசமாடும் சாகசக்காரியல்ல. ஒருவனுக்கே தன்னையும் தன் வாழ்வையும் தந்துவிடும் பண்பு பெற்ற உத்தமியும் அல்ல.

சிதைந்து சீரழிந்து கொண்டிருந்த பாண்டிய மன்னர் குலத்தில், பெரும்புகழ் எல்லாம் சரித்திரப்பெருமை என்று தேய்ந்துவிடச் சிறுகிச் சின்னபின்னப்பட்டு வந்த பாண்டிய நாட்டைத் துண்டு துண்டாகக் குறுக்கி ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் வகையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள் அவள். ஆகவே, அவளும் ஒர் அரசிளங்குமரிதான்.

பாண்டியர் ஆட்சி பலமிழந்து கொண்டிருந்தது. ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீரத்தை, வலிமையை, வளத்தைப் போற்றி வளர்ப்பதற்குப் பதிலாகக் கேளிக்கைகளையும் உல்லாசப் பொழுதுபோக்குகளையும் வளர்ப்பதில் ஆர்வங்காட்டி வந்தார்கள்.

அமுதவல்லியிடமும் அந்தக்குணங்கள் படிந்திருந்தன. தனது உள்ளம் கவரும் வனப்பும் வலிமையும் பெற்ற, ஆணழகரை அவ்வப்போது தன் அந்தப்புறத்தில் அனுமதிக்க அவள் கூசியதில்லை. அவள் கடைக் கண்ணின் இன்னருள் பெற்றவர்களில் ஒருசிலரே அவளின் நீடித்த