பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

19

 அவன் அலட்சியமாகச் சிரித்தான். 'வேலை இருப்பதனால் தான் நான் இங்கே வரவேண்டியது அவசியமாயிற்று, அமுதம். நீ என்னைக்கண்டு பேசவே மறுத்து வந்தாய். எப்படியும் உன்னைக் கண்டே தீருவது என்று உறுதி கொண்டேன். இன்றிரவில் நீ ஆசையோடு விழித்திருப்பாய்; வழியும் எளிதில் திறந்துகொள்ளும் என்பதும் எனக்குத் தெரிந்தது. நீ ஆவலோடு எதிர் நோக்கும் திருமாறன் வரமாட்டான் என்பதும் எனக்குத் தெரியும்...'

அமுதவல்லியின் அச்சம் உண்மையிலேயே பன் மடங்காயிற்று 'இதெல்லாம் உனக்கு எப்படித்தெரிந்தது?' என்று அவள் பதறினாள்.

‘எப்படியோ தெரிந்தது!’ என்று தன் இருகைகளையும் உவகையோடு தேய்த்துக்கொண்டு தடித்த விகாரமான உதடுகளை மேலும் விகாரமாக நெளித்துச் சுளித்து, முகத்தைக் கோரமாக்கி நின்றான் அவன்.

'திருமாறனை வழியில் தாக்கி......' என்று அமுதவல்லி கேட்கவும், அவன் கடகட வென்று சிரித்தான்.

'அமுதவல்லிப் பிராட்டியாருக்குத் திருமாறனையும் புரிந்துகொள்ளத் தெரியாது. இந்த எயில்ஊர் ஆந்தையையும் நன்றாகத் தெரியாது. அவ்வளவுதான் திருமாறன். ஏதேனும் சூழ்ச்சி செய்து கொண்டிருப்பான், அல்லது ஆழ்துயில் பயின்று கொண்டிருப்பான்...'

எயில் ஊர் ஆந்தை பெயருக்கேற்ப இராக்காடு சுற்றி அலைந்து இங்கு வந்து முழிப்பதோடு கூச்சலிட்டுக் கொண்டும் நிற்கிறது. அப்படித்தானே? உனக்கு ஆந்தையெனும்