பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அன்னக்கிளி

 பெயர் சரியானதே' என்றாள் அமுதவல்லி. தனது பயத்தைச் சிறிதளவு மறைப்பதற்காகவே அவள் வீரத்தனப் பேச்சுப் பேச முயன்றாள்.

ஆந்தை தனது தனிரகச் சிரிப்பைச் சிதறினான் மீண்டும்.

"வெளியே போய்க் கூச்சலிடு... நான் உறங்க வேண்டும்' என்றாள் அவள். அமுதத்தின் கைகள் குத்தீட்டியை விளையாட்டாக உருட்டிக் கொண்டிருப்பதுபோல் உருள விடும் அலுவலில் ஈடுபட்டிருந்தன. அவள் கள்ள நோக்கு அவ்வப்போது அவன் மீது பாய்ந்தது.

அவன் அவள் கருத்தை உணராமலில்லை. ஆயினும் உணரும் திறனற்றவன் போலவே நின்றான் ஆந்தை. அவன் ஏன் பிறருக்கு அஞ்சவேண்டும்? அதிலும் காற்றில் ஆடிடும் கொடிபோல் நிற்கும் ஓர் அபலைப் பெண்ணுக்கா அவன் பயப்படப் போகிருன்?

‘பிராட்டியார் சுகமாகத் துாங்கலாம். அமுதவல்லியின் உறக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கடுகளவேனும் கிடையாது...'

மரியாதையோடு பேசுவது போல் தொனித்தாலும் அவன் பேச்சில் கிண்டல்தான் மிகுந்திருந்தது. அதனால் அவள் முகம் கடுகடுப்புற்றது. 'முதலில் நீ இங்கிருந்து வெளியே போ!' என்று மறுபடியும் உத்தரவிட்டாள்.

ஆந்தையின் சிரிப்பு அவனது புதரென அடர்ந்த அரிவாள் மீசைக்குள் புகுந்து விளேயாடுவது போல் தோற்றம் காட்டியது. 'எனக்கும் வேறு பணிகள் உள்ளன