பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

21

 அம்மையே! நீ அன்புடன் எனக்குச் சேரவேண்டியதை என்னிடம் தந்துவிட்டால் நான் ஏன் இங்கு நிற்கப் போகிறேன்? என்றான் அவன்.

'உனக்குச் சேரவேண்டியதா?' அமுதவல்லியின் கேள்வியிலும், பார்வையிலும் வியப்பு தொத்தி நின்றது.

'நீ மறந்து விடுவாய் என்று எனக்குத் தெரியும். நினைவுறுத்தி அதைப் பெற்றுச் செல்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இன்னும் இரண்டொரு நாட்களில் கொற்கைத் துறைமுகத்திலிருந்து கிளம்பும் மரக்கலத்தில் இடம் பிடித்துக்கொண்டு செல்வேன். திரைகடலோடும் ஆசை எனக்கும் வந்துவிட்டது. சாவகம், புட்பகம் அல்லது யவனம் என்று எங்காவது போய்விடுவேன்...'

‘நல்ல முடிவுதான். திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு முன் பயிற்சியாக இங்கு அகப்பட்டதைச் சுருட்டிச் செல்லும் எண்ணத்தோடு வந்தாயாக்கும்?' என்று கேட்டாள் அலங்காரி.

'அகப்பட்டது எதுவும் எனக்கு வேண்டாம். நல்ல முத்துக்களாலான நாலு வடம் முத்தாரம் எனக்குச் சேர வேண்டியது. அது என் கைக்கு வந்தாக வேண்டும்!'

அமுதம் திடுக்கிட்டாள் 'முத்தாரமா? கனவு கண்டு உளறுகிருயா ஆங்தை?’ என்றாள்.

ஆந்தையின் விழிகள் அவளை உறுத்து நோக்கின. 'எயில் ஊர் ஆந்தை உளறுவதில்லை. விளையாட விரும்புவதுமில்லே. அமுதவல்லிப் பிராட்டியின் அண்ணன் சடையவர்ம பாண்டியனின் அரசமாதேவி கருவுற்று இருந்த போது அவர்கள் திருக்கழுத்தை அணி செய்த முத்து