பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

29

 அவன் எதிர்பாராத வேகம் பெற்றாள் அன்னம். கழற்காற்றுப் போல் வேகமிட்டுச் சுற்றி கதவு வழிப் பாய்ந்து படிக் கட்டுகளின் வழியே தடதடவென விழுந்தெடுத்து ஓடினாள் அபலை.

ஆந்தை அவளைத் தொடர்ந்து செல்ல வேகமாக அடி பெயர்த்தான். அவ்வேளையில் அமுதவல்லி, குறி பார்த்து எறிந்த வெண்கல விளக்கு ஒன்று அவன் கணுக்காவில் வசமாகத் தாக்கவும், அவனது உயிரைச் சுண்டி இழுத்தது போன்ற வேதனை ஏற்பட்டது. அவன் அடிபட்ட இடத்தை விரலால் நீவி விடும்போது, அமுதவல்லி ஒரு விளக்குத் தண்டினால் அவன் மண்டையில் ஓங்கி அறைந்தாள்.

அதே கணத்தில்---

கீழே அன்னக்கிளியின் பயக் குரல் நீண்டு ஒலித்து, அச்சம் உண்டாக்கியது. யாரே ஓடியதுபோல் ஒரு ஒலி கேட்டது. குதிரை ஒன்று விரட்டி ஓட்டப்படும் ஓசையும் சேர்ந்து கேட்டது.

5. கலகலச் சிரிப்பொலி

எட்டிப் பிடித்துக் குதறிக் கிழிக்க நீண்ட கோரக் கரத்தின் நகங்களிடையே சிக்காமல் தப்பி ஓடும் சிட்டுக் குருவி போல் பாய்ந்து நழுவிய அன்னக்கிளி எண்ணியிருக்க முடியாது, பூனையின் பிடிக்குத் தப்பி வந்து நாயின் பிடியிலே அகப்பட்டுக்கொள்ள நேரிடும் என்று.

ஆனால் அதுதான் நிகழ்ந்தது.

வெறிப்பிடித்த எயில் ஊர் ஆந்தையிடம் அகப்பட்டுக் கொள்ள விரும்பாது பாய்ந்து ஓடிப் படிக் கட்டுகளில்