அன்னக்கிளி
37
முதுகில் தனது நீண்ட வாளின் பின்புறப் பிடியினால் ஒரு அறை வைத்து வழியனுப்பினான் மருது. வீரன் போல் வந்த வீணன் முதுகைக் கைகளால் தடவ முயன்று, உடம்பை நெளித்துக்கொண்டு ஓடியது வேடிக்கைக் காட்சியாக அமைந்தது.
அதைக்கண்டு திருமலையும் சிரித்தான். அன்னக்கிளியின் கிண்கிணி நகையொலியும் அத்துடன் இணைந்து புரண்டது.
6. ஆ! அந்த வண்டி?
'புதுமலர் போன்ற அழகிய பெண்ணே உன் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமோ?’ என்று கேட்டான் திருமலைக்கொழுந்து.
மகிழ்வும் நாணமும் அழகு முகத்தில் குழப்பம் தீட்ட அவள் 'அன்னக்கிளி' என முணுமுணுத்துத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
'அன்னக்கிளி பறந்து செல்ல விரும்பவில்லை என்று புரிந்தது. 'கிளியைக் கூண்டில் அடைத்துச் செல்லத் துணிந்தவன் யாரோ?' என்று அவன் விசாரித்தான்.
இன்று இரவு எவ்வளவோ விபத்துக்களும் விபரீதங்களும் நிகழ்ந்து விட்டன என்றாள் அன்னம். என்ன என்று அறியும் ஆவலை வீரர்கள் இருவரும் காட்டிக்கொண்டதால் அவள் நடந்ததை எல்லாம் ஒருவாறு சொல்லித் தீர்த்தாள்
கயலெனப் புரண்டு கொண்டிருந்த அவள் விழிகள் அங்கு நின்ற வண்டிமீது மோதின. அதன் புறத்தே தீட்டப்