உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அன்னக்கிளி


பட்டிருந்த சின்னம் அவள் பார்வையை அடிக்கடி ஈர்த்தது. அவள் குனிந்து அதைக் கவனித்தாள். வண்டிக்குள் ஏறும் பளபளப்பான படியமைப்பையும் உற்றுநோக்கினாள். 'ஆ, இந்த வண்டி!' எனும் வியப்புச் சொல் அவள் வாயிலிருந்து உதிர்ந்தது.

'இந்த வண்டிக்கு என்ன?’ என்று திருமலை வினவினான்.

'இது திருமாறனின் சொந்த வண்டி. இது பிராட்டி வீட்டின் அருகே எப்படி வந்தது? அவர்தான் வரவே இல்லையே! என்று அன்னம் தன் மனக்குழப்பத்தை வாய்விட்டே சொன்னாள்.

'திருமாறனா? எந்தத் திருமாறன்?’ என்று மருது கேட்டான்.

'இந் நகரின் செல்வர்களில் ஒருவர். செல்வாக்கு மிகுந்தவர்...'

'முத்து வாணிபத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பதாகப் பெருமை பேசும் திருமாறன்தானே?' என்று மருது பாண்டியன் விசாரித்தான்.

"நான் மனம் வைத்தால் அரசு கட்டிலில்கூட அமர முடியும்!' என்று கர்வத்தோடு பேசி வருகிற திருமாறன் தானே? என்றான் திருமலை.

‘சூழ்ச்சிக்கும், வஞ்சனைக்கும், சிறுமதிக்கும் உறைவிடமாக விளங்கும் திருமாறன் தானா நீ குறிப்பிடுவது?’ என்று படபடத்தான் மருது.