பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அன்னக்கிளி

 போல் அன்னக்கிளியைத் தூக்கித் தன் குதிரைமீது அமர்த்திக்கொண்டு கிளம்பினான்.

மருது கீழே இறங்கி வண்டியை ஓர் ஒரமாக இழுத்து விட்டுக் குதிரைகளை அவிழ்த்து அதில் கட்டிப் போட்டான். பிறகு தன் குதிரைமீது ஏறிக் கொண்டு திருமலையைத் தொடர்ந்தான்.

குதிரை வண்டி அமுதவல்லியின் மாளிகையிலிருந்து வெகுதுரரம் சென்றிருக்கவில்லை. எனவே அவர்கள் சீக்கிரம் வீட்டருகே வந்துவிட்டார்கள்.

இப்பொழுது நிலவு வெகு பிரகாசமாக இருந்தது. விடிவின் நேரம் நெருங்கிவிட்டபோதிலும், விடிவதற்கு இன்னும் அதிகப் பொழுது இருக்கும்போலும் என்ற மயக்கத்தை உண்டாக்கும் விதத்தில் வெள்ளிய நிலவு பூச்சொரிந்து குளிர் இளம் பொழுதில், மகிழ்வு துளும்பும் உள்ளத்தோடு, தனது உள்ளம் கவர்ந்த அன்பனோடு சேர்ந்து ஒரே குதிரைமீது அமர்ந்து வீடு நோக்கி வருவது மிக இனிய அனுபவமாகவே பட்டது அந்த இளம் பெண்ணுக்கு. அவள் அவன் மார்புமீது சாய்ந்து கொண்டாள். அன்போடும் ஆதரவோடும் அவன் கை அவளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டது. இருவருக்கும் அது சுகமான புதிய அனுபவம்தான்.

ஆனால், அந்த இனிய காட்சியைக் கண்டு கலங்கின. இரு கண்கள்; கொதித்தது ஒரு உள்ளம்; எரிந்தது ஒரு வயிறு. அனல் மூச்சு வீசியது நாசி. அவை அழகி அமுதவல்விக்குச் சொந்தம். -

எயில் ஊர் ஆந்தையினால் அறையப்பட்டு, வேதனையோடு படுக்கையில் விழுந்த அமுதவல்லி சிறிது நேரம்