பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

41

 கண்ணீர் வடித்தபடி கிடந்தாள். ஆயினும், மூலையில் முடங்கி அழுதுகொண்டே பொழுதுபோக்கும் இனத்தைச் சேர்ந்த பெண் அல்ல அவள்.

'இனி என்ன செய்யவேண்டும்? திருமாறனை வழிக்குக் கொண்டுவருவது எப்படி? இந்த ஆந்தையை மடக்குவது எவ்வாறு?’ என்றெல்லாம் அவள் மனம் திட்டம் திட்டுவதில் ஈடுபட்டது. 'திருமாறனுக்கு நான் கடிதம் அனுப்பியது ஆந்தைக்கு எப்படித் தெரிந்தது? மாறனுக்காக என் வீட்டுக் கதவு திறந்திருக்கு மென்பதை இவன் அறிய முடிந்தது எவ்வாறு?’ என்றும் அவள் மனம் ஐயமுற்றது.

'ஆந்தை அன்னக்கிளியை புகழ்ந்து பாராட்டினானே! அவள் மீது ஆசை இருப்பதாகக் காட்டிக் கொண்டானே! அவள் அவனை முன்பே சந்தித்திருப்பாளோ? திருமாறனை காணப்போகும் வழியில் அவன் அவளைக் கண்டு பேசிச் செய்தி அறிந்திருக்கவும் முடியுமல்லவா?' சந்தேகம் கொண்ட உள்ளம் இப்படிக் கொடி படர விட்டது.

அமுதவல்லி ஊஞ்சலில் அமர்ந்தும், எழுந்து நடந்தும், சாளரம் தோறும் நின்று நின்றும் சிந்தனைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள். வெளி உலகின் மோகனக் கொலு அவள் பார்வைப் புலனையும் தொட்டதால், ஒர் இடத்தில் அவள் அதிக நேரம் நின்றாள்.

'அன்னம் அலறினாளே? என்ன ஆனாளோ தெரியவில்லையே?’ என்று அவள் எண்ணத் தொடங்கியபோதுதான், குதிரைகள் வந்த காட்சி அவளது பார்வையை இழுத்தது. மெது நடையில் உலா வருவதுபோல் குதிரைகள் வருவதும், ஒரு குதிரைமீது அன்னக்கிளியும் வனப்புள்ள இளைஞன் ஒருவனும் வீற்றிருந்த நேர்த்தியும் எந்தப்