பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்னக்கிளி

47


இன்பம் கண்டாயாக்கும்?’ என்று குத்தலாகச் சொன்னாள் அவள்.

'உண்மைதான், அம்மா. நேற்று மாலையில் நமது வீதி வழியே அந்த இரண்டு பேரும் குதிரைகளில் போனார்க்கள். அப்பொழுது தற்செயலாக நான் அவர்களைப்பார்க்க நேரிட்டது. இரண்டாவது தடவையாக நான் அவ்விருவரையும் கண்டது எனக்கு ஏற்பட்ட விபத்தின்போதுதான். அவர்கள் இருவரும் தக்க தருணத்தில் வந்து உதவி புரிந்திராவிட்டால், என் கதி என்ன ஆகியிருக்குமோ?’ என்று கூறினாள் அன்னக்கிளி.

அவள் பொய் சொல்லவில்லை என்பதை நன்கு உணர முடிந்தது தலைவியால். ஆகவே அவள் எரிச்சலோடு, 'சரிசரி, போய் உன் வேலைகளைக் கவனி. அப்புறம் உன்னைக் கூப்பிடுகிறேன்’ என்று சொல்லி அன்னத்தை அனுப்பிவைத்தாள்.

யோசனையில் ஆழ்ந்துவிட முயன்ற அமுதவல்லி அவளை அறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். அது பணிப்பெண்களுக்கு நல்லதாயிற்று. இல்லையெனில் அவர்களை ஓட ஓட விரட்டி, தன் எரிச்சலையும் ஆத்திரத்தையும் அவர்களிடம் தீர்த்துக்கொள்ள முயலுவாள் தலைவி.

அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாளோ, அமுதவல்லிக்கே அது தெரியாது. துர்க்கனவிலிருந்து விழித்தெழுந்தவள்போல் அவள் பதறி எழுந்தாள். 'அன்னம்!' என்று அலறினாள்.

அன்னக்கிளி ஓடிவந்து நின்றதும் 'அன்னம் இப்பொழுது நீ திருமாறன் இல்லம் சென்றாக வேண்டும்’ என்றாள் தலைவி.