பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அன்னக்கிளி

 இரவில் வந்தது' என்று அவள் உறுதியாக அறிய முடிந்தது. இது வழியில் நிறுத்தப்பட்டு பிறகு காணாமல் போய்விட்டதென்று காலையில் எண்ணினோமே, இங்கே எப்படி வந்தது? யாரும் இதை மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விட்டிருப்பார்களோ தெரியவில்லேயே என்ற திகைப்பு அவளுக்கு ஏற்பட்டது.

அவள் அங்குமிங்கும் பார்த்தபடி அடியெடுத்து வைத்தாள். ஓர் அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளிருந்து கலகலவெனும் ஓசை வந்துகொண்டிருந்தது. இயல்பான உணர்வு தூண்டவும் அங்கே என்ன நடக்கிறது என்று அறியும் அவாவோடு அவள் உள்ளே எட்டிப்பார்த்தாள். அவளால் அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை.

அங்கு முத்துக்கள் குவியல் குவியலாகக் கிட்ந்தன. பலதரப்பட்ட முத்துக்கள் தரவாரியாகப் பிரித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. வேறு பல மணிகளும் மதிப்புயர்ந்த கல் நகைகளும் இறைந்து கிடந்தன. ஆள் யாரும் அவள் பார்வையில் படவில்லை. அந்த அறைக்கும் உள் அறையாக வேது இடம் இருக்குமோ என்று அன்னம் உள்ளே கொஞ்சம் நகர்ந்து எட்டிப்பார்த்தாள்.

'ஆகா, ஓடிச்சென்ற கிளி தானாக வந்து கூண்டில் சிக்கிக்கொண்டது. பளா பளா!' என்று ஒரு முரட்டுக் குரல் காதில் விழுந்தது. அவள் பதற்றத்துடன் திரும்பி நோக்கினாள்.

அவள் வருவதற்கு வழி அமைத்துத் தந்த வாசல் இப்போது இறுக மூடிக் காணப்பட்டது. வெளியே நின்று கனத்த குரலெழுப்பி யாரோ சிரிப்பதும் செவிட்டில்