பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அன்னக்கிளி

 'இதையும் நம்ப வேண்டுமோ?' என ஐயுறுவாள் போல், அமுதவல்லியின் பார்வை அவன் முகத்தில் பதிந்தது ஒரு கணம்.

வைரத்தை வெட்டும் வைரம்போல், அவளது கூரிய நோக்கைக் கூசச்செய்யும் பார்வை அவன் விழிகளிலிருந்து தெறித்துக் கொண்டிருந்தது. அதை எதிர்த்து நிற்கும் திராணி அற்று, அமுதவல்லி தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

'ஆந்தையைப்பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது?’ என்று திருமாறன் கேட்டான்.

'நீங்கள் இரவில் இங்கு வரமாட்டீர்கள் என்று அவன் உறுதியாகச் சொன்னானே? என்றாள் அமுதம்.

'வருவது அறிந்து கூறும் கலையில் தேர்ந்தவனாக இருப்பான் அவன்!'

'அப்படியொன்றுமில்லே. உங்களை நான் எதிர்பார்த்திருப்பேன் என்று தெரிந்துகொண்டு, நான் உங்களுக்கு எழுதிய கடிதம் பற்றி அறிந்துகொண்டு, உங்கள் எண்னத்தையும் புரிந்துகொண்டு, கள்ள நினைப்போடு குள்ளநரிபோல் திட்டமிட்டுச் செயல் புரிந்திருக்கிறான் அவன்...'

அவனைப்பற்றி உனக்கு அதிகம் தெரியும் என்றே தோன்றுகிறது. பின் வீணாக என்னை ஏன் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமோ?’ என்ற மாறனின் பேச்சுக்கு பொருள் பொதிந்த சிரிப்பே முத்தாய்ப்பு வைத்தது.

அவன் பேசிய தோரணையும் சிரித்த விதமும் அமுதவல்லிக்குக் கசப்பே தந்தன. 'உங்களுக்கு நான் அனுப்பிய