பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

67

 வரமாட்டேன் என்று சொன்னேனே! அவள் தானே மிரட்டி என்னை அனுப்பிவைத்தாள். இப்பொழுது அவளா இடர்ப்படுகிறாள்?’ என்று குமைந்து குமுறினாள்.

செல்வாக்கும் சீரும் சிறப்பும் பெற்ற பெரியவரான திருமாறன்தான் சிறுமைப் புத்தியோடு நடந்துகொள்கிறாரோ என அயிர்த்தாள் பேதை. ஆனால் சிரித்ததே ஒரு குரல்; அது அவருடையது அல்லவே? என்னவோ பேசியதும் அவர் இல்லை என்று தெரிந்ததே? எனினும், செவியில் புகுந்த ஒலி முன்பு கேட்டுப் பழகிய குரல் போலவும் இருந்ததே...

அன்னக்கிளி அங்குமிங்கும் அலைந்தாள். தப்பி ஓட வழி எதுவும் இல்லையென்று நிச்சயமாகத் தெரிந்தது. 'நான் வழியோடு போயிருந்திருக்க வேண்டும். இந்த அறைக்குள் வந்திருக்கக் கூடாது’ என்று நினைத்தாள். 'திருமாறன் இல்லை என்று அறிந்ததும் வீட்டிற்கே திரும்பிச் சென்றிருப்பின் நன்றாக இருந்திருக்குமே!’ என ஆசைப்பட்டாள். என்ன நினைத்து என்ன பயன்? கூண்டுக் கிளியாக மாறி ஆயிற்று... இனி...

கதவு கிரீச்சிடும் ஓசை அவள் கவனத்தைக் கவர்ந்தது ஒரு கண் விளிம்பினுாடு மினுமினுத்தது. எவருடைய கண் அது?

சில பற்கள் பளிச்சிட்டன. யார் சிரிப்பது இவ்விதம்?

அன்னக்கிளியின் உள்ளம் பதைபதைத்தது. உடலின் நடுக்கம் அதிகமாயிற்று. என்ன நேரப்போகிறதோ என்ற அச்சம் அவளைப் பிடித்து உலுக்கியது. சிறிது சிறிதாகத் திறக்கப்பட்ட கதவின் பக்கம் பதிந்துவிட்ட விழிகளைத்