பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



70

அன்னக்கிளி


'ஆகா, கிளியின் பவளவாய் சொற்களைச் சிந்தி விட்டது அம்மா!' என்று கெக்கலித்தான் ஆந்தை. 'அவரிடம் பேச முடியாது, கண்ணே. என்னோடு பேசிக் கொண்டிருக்கலாம்...'

‘எங்கள் தலைவி அமுதவல்லி பிராட்டியார்...' என்று அவள் பேச்செடுத்ததைத் தொடரவிடாது முடித்தான் அவன்.

'சொல்லவேண்டியதை - சொல்ல ஆசைப்பட்டதை - திருமாறனிடமே நேரில் சொல்லிக்கொள்வார்கள். அந்தக் கவலை தோழி அன்னக்கிளிக்கு வேண்டாம்!'

'பிராட்டியாரின் கடிதத்தை அவரிடம் கொடுத்தால் தானே, திருமாறன் அவளைக் கண்டு பேசச் செல்வார்?

'அந்தக் கவலை உனக்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறேனே. இதற்குள் உன் தலைவி திருமாறனிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருப்பாள். இருவரும் அருகருகே அமர்ந்து ஆனந்தமாகக் கதை பேசிக்கொண்டிருக்தாலும் இருக்கக்கூடும்...' -

அன்னக்கிளியின் முகத்தில் படர்ந்த வியப்பு உணர்ச்சியைக் கண்டு சிரித்தான் ஆந்தை. 'ஆமாம், அன்னம். திருமாறன் இப்பொழுது அமுதவல்லியின் இல்லத்தில் தான் இருக்கிறார்...' என்றான்.

'அவ்வாறானால் என்னைப் போகவிடு!’ என நகர முயன்றாள் அன்னம்.

'உனக்கு என்ன வேலை இப்போது அங்கே? திருமாறனோடு உரையாடிப் பொழுதைப் பொன்னாக்க முயன்று.