பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அன்னக்கிளி

 வாளின் பின்புறத்தால் முதுகில் ஓங்கி அறைந்துவிட்டு மற்றுமொரு அடி கொடுக்கச் சித்தமாக நின்ற திருமலைக் கொழுந்து அவன் பார்வையில் படவும், எயில் ஊர் ஆங்தையின் முகம் பேயைக் கண்டு பயந்தவனின் முகம் போல் ஆயிற்று.

அவன் அறைக்குள் நழுவினான். கதவைச் சாத்தித் தாளிடும் முன்னரே திருமலையும் அவன் பின்னாலேயே புகுத்து விட்டான்.

'மீண்டும் என்னைக் காக்க வந்த தெய்வமே!’ என்று வணங்கி வாழ்த்தியது அன்னக்கிளியின் உள்ளம். அவள் கண்கள் மகிழ்வையும் நன்றியையும் காட்டின.

ஆந்தை அவளைக் கவனிக்காமலே உள் அறையினுள் பிரவேசித்தான்.

'அன்னம், நீ போய்விடு... வீட்டிற்கே போ!' என்று வழிகாட்டினான் திருமலை.

விடுதலை பெற்ற பறவைபோல் வெளிச்சம் நோக்கிப் பாய்ந்தாள் அன்னக்கிளி. வெளியே நின்ற மருதுபாண்டியனைக் கண்டதும், 'இவரும் உடன் இருக்கையில், அவருக்குத் தீங்கு வரவே வராது' என்று மனம் தேறினாள், உற்சாகத்தோடு தன் வழியே சென்றாள்.

அறையினுள் புகுந்த எயில் ஊர் ஆந்தை, திருமலையை முந்திக்கொண்டான். வேகமாகக் கதவை அடைத்துத் தாளிட்டான்.

'ஆந்தை, நீ உள்ளேயே கிட. இனி நீ தப்பப்போவதில்லை! என்ற திருமலைக்கொழுந்து, அங்கே கிடந்த