பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அன்னக்கிளி

 கிட்டியிருக்கிறது’ என்றார் அவர். அவ் வணிகர் விரும்பிய ஆரம் திருமாறனிடம் இல்லை.

மாறன் வந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய விரல்கள் அன்னம் கொடுத்திருந்த கடிதத்தோடு விளையாடின. பேச்சுச் சுவையில் அது நழுவிக்கீழே விழுந்து விட்டது. எயில் ஊர் ஆந்தையின் அருகில் தான் அது விழுந்தது. ஆந்தை குனிந்து அதை எடுத்தான். எடுக்கின்றபோதே 'அமுதவல்லி’ என்ற பெயர் அவன் கண்ணையும் நெஞ்சையும் உறுத்தியதால் கடிதத்தின் உள்ளடக்கத்தையும் படித்துவிட்டான். ஒகோ’! என்று சிலிர்த்தெழுந்தது அவன் உள்ளம். அங்கு அமுதவல்லி பற்றிய நினைவுகள் மோதிச் சுழியிட்டன. அமுதவல்லியிடம் முத்தாரம் இருப்பதும் அவன் எண்ணத்தில் எழுந்தது; எனினும் அதை அவன் வெளியே சொல்லவில்லே. அவனுடைய நரி மூளை சுயநலத் திட்டங்கள் முனைந்து விட்டது.

தேவையான அணிமணிகளைப் பெற்றுச் செல்வதற்காக மறு நாள் வருவதாய் உறுதி கூறி, முன்பணமும் கொடுத்து விட்டு வணிகர் கிளம்பினார். அவரை அவரது இருப்பிடத்தில் விட்டுவிட்டு வருமாறு ஒரு வண்டியோட்டிக்குக் கட்டளேயிட்டார் மாறன்.

முத்து வியாபாரியை அவரது விடுதியில் விட்டு வண்டி திரும்புகிறபோது, ஆந்தையின் இரும்புக் கரம் வண்டியோட்டியைப் பேச்சற்றவனாக மாற்றியது. எதுவும் அறியாதவனாய்க் குதிரைகளைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் குரல்வளையை ஆந்தையின் கரங்கள் பற்றி அழுத்தின. ஈரத் துணியைப் பிடித்து உலுக்கி உதறி வீசுவது போல, அவன் உயிரைப் பிழிந்துவிட்டு வெற்றுடலை ஓர்