பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அன்னக்கிளி

 'அவன் எப்படி மாயமாய் மறைந்து போனான்?' என்று திகைத்தனர் திருமலையும் மருதுவும். என்ன செய்வது, அல்லது என்ன சொல்வது என்று புரியாதவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி நின்றார்கள்.

அறையைக் கூர்ந்து நோக்கிய திருமாறனின் விழிகள், திறக்கப்பட்டு வெறுமையாய்க் கிடந்த ஒரு பெட்டியில் மோதியதும் அதிர்ச்சியால் அகன்றன. 'ஆங்?’ என்று வியப்பாலும் ஆங்காரத்தாலும் ஒலி எழுப்பினார் அவர்.

'மதிப்பு மிகுந்த பொன் முடியும், வைர வாளும் போய்விட்டன. இந்தப் பெட்டியில்தான் அவை இருந்தன. போங்கள்! ஆந்தையைப் பிடியுங்கள், கள்ள வழி மூலம் அவன் தப்பி ஓடியிருக்கிறான். எப்படியும் அவனைப் பிடித்தாக வேண்டும். துறைமுகத்துக்கும் ஆட்களை அனுப்புகிறேன்’ என்று படபடவெனச் சொற்களை உதிர்த்துவிட்டு வெறி கொண்டவர் போல் வேகமாக விரைந்தார் திருமாறன்.

12. இருளில் பதுங்கும் உருவம்

ழகி அமுதவல்லி ஆத்திரம் மூட்டப்பெற்ற காளி தேவிபோல் காட்சி அளித்தாள். அவள் கண்கள் நெருப்புப் பந்துகள் போல் ஜொலித்தன. கொல்லன் உலை மூச்சு விடுவது போல் அனல் மூச்சு அவள் நாசியிலிருந்து வந்து கொண்டிருந்தது.

‘நம்மை ஏமாற்றத் துணிந்த திருமாறன் வீடு தேடி வந்து அவமதிக்கவும் செய்தானே! முத்தாரம் அல்லவா வேண்டுமாம் இவனுக்கு, யாருக்குத்தான் அது வேண்டாம்? ஆந்தை என்கிற தடியன் கூடத்தான் அதற்கு