பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அன்னக்கிளி

சடையவர்ம பாண்டியனின் அரசமாதேவியின் சங்குக் கழுத்தை அமுபடுத்திய நல்ல முத்துமாலை நாலு வட ஆரம் அவனது தங்கை அமுதவல்லியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதைத் தருவதற்கு அரசி ஒப்பவில்லை. அதுபோல் செய்து கொடுப்பதாக அண்ணன் வாக்களித்தான். அந்த முத்தாரத்தில் சேர்க்கப்பட்ட முத்துக்களைப்போன்ற ஒரே அளவும் உயர்வும் அழகும் பொருந்திய சிறப்பான முத்துக்கள் கிடைப்பது சிரமம் என்று தோன்றியது. அரசமாதேவி கருவுற்றிருந்தாள். ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். சடையவர்மனுக்குப் பிறகு தன்னுடைய மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும் என்று ஆசைப் பயிர் வளர்த்து வந்த அமுதவல்லி வயிறெரிந்தாள். பொறமை கொண்டாள். ஒரு நாள் பால் குடிக்கும்போது சிறு குழந்தையின் நாசியில் அது சென்று, புரைக்கேறி, மூச்சுத் திணறி குழந்தை செத்துவிட்டதாகச் செய்தி பரவியது. குழந்தையைச் சாகடித்த 'பெருமை' அமுதவல்லிக்கே உரியது என்கிற ரகசியம் ஒரு சிலருக்கே தெரிய வந்தது. சில தினங்களிலேயே அரசமா தேவியும் மனம் உளைத்து, சன்னி கண்டு செத்துப்போனாள். அவ்வாறு அவளுக்கு மரணபாக்கியம் கிட்டும்படி செய்தவள் அமுதமேயாவாள் என்று சிலர் ஐயுற்றார்கள். அதை நிலை நிறுத்துவதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அரசமா தேவியின் கழுத்திலிருந்த முத்தாரம் அமுதவல்லியிடம் சேர்ந்தது. குழந்தையையும் மனைவியையும் பறிகொடுத்த துக்கத்தினால் பித்துற்றுச் செயல் திறம் இழந்து காணப்பட்ட சடையவர்மன் பிற எதிலும் கவனம் செலுத்தவில்லை. அவன் வெகு காலம் வாழ்ந்திருக்கவுமில்லை. அவனுடைய மரணம் அமுதவல்லியின் மகனை அரசு கட்டிலில் அமர்த்தி விடவுமில்லை. காரணம்-சடையவர்மன் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முந்தியே, அமுதவல்லியின் மகன் கொடிய