பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அன்னக்கிளி


அதனால், அன்னக்கிளி அங்கு வந்ததையும் சாளரத்தினுடே நோக்கியதையும், தலைவி உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்த திசையில் வெறுமையே இருப்பதைக் கண்டு திகைத்ததையும் அமுதவல்லி அறிந்தாளில்லை.

'அங்கே என்ன அம்மா பார்க்கிறீர்கள்? ஏன் இப்படிக் குழப்பமுற்று நிற்கிறீர்கள்?' என்று அன்னக்கிளி கேள்வி கேட்கவும், அவள் திடுக்கிட்டாள். 'அங்கு மரங்களினூடே யாரோ பதுங்கிப் பதுங்கி மறைந்தது போலிருந்தது. காலையிலும் பார்த்தேன். இப்பொழுதும் அந்த உருவம் தோன்றி மறைந்தது...' என்றாள்.

பேயாக இருக்குமோ?' என்று முணுமுணுத்தாள் பேதை அன்னம்.

அந் நேரத்திய மன நிலையிலும் அமுதவல்லிக்குச் சிரிப்பு வந்தது. வேதனைச் சிரிப்பு உகுத்தாள்.'பேயா வது பூதமாவது! மனிதர்களே பேயர்களாக மாறி வருகிற காலத்தில், பேய் என்று தனியாக ஒன்று திரியவா போகிறது?" என்றாள்.

'இல்லை. குறிப்பிட்ட வேளைக்கு வருவது, வந்தது போல் மறைவது என்றால்...'

'அன்னம், இதை முற்றும் ஆராயத்தான் வேண்டும். அது சரி, உனக்கு ஏன் இவ்வளவு நாழிகை?'

நான் போன வேளையில் திருமாறன் வீட்டில் இல்லையம்மா, எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து கடிதத்தை அவர் கையில் தரவேண்டும் என்று நீங்கள் கட்டளையிட்டிருந்ததால்...' என அன்னம் விளக்கமாகக் கூறத்-