பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அன்னக்கிளி


காத்திருந்த ஆந்தை திருமாறனின் பெரிய வீட்டின் அறை தோறும் எட்டிப் பார்த்துப் பொழுது போக்க முன் வந்தபோதுதான் முத்துக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த அறையைக் கண்டான். அழகியைக் காணச் சென்ற பெரியவர் விரைவில் வீடு திரும்ப மாட்டார் என்று அவன் மனம் அறிவித்தது. ஆசை தூண்டியது. அவன் எப்படியோ சில சாவிகளைத் தேடிப்பிடித்து அந்த அறைகளைத் திறந்து உட்புகுந்தான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் அவனாகவே வாய்விட்டு ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அந்த ஒலிதான் சும்மா சுற்றி வந்த அன்னக் கிளியை அவ்வறையின் பக்கம் கவர்ந்திழுத்தது.

வெளியே காலடி ஓசை கேட்கவே, ஆந்தை கதவின் யின் பதுங்கிக் கொண்டான். அன்னக்கிளி முதல் அறைக்குள் பாரையும் காணாமல் இரண்டாவது அறைக்குள் அடி எடுத்து வைத்த சமயம், அவன் குபீரென்று வெளியே வந்து, கதவை இழுத்துப் பூட்டினான். தனது வெற்றியில் களிப்புற்று, தன்னையும் சூழ்நிலையையும் மறந்து நின்ற போதுதான் ஆந்தைக்கு அதிர்ச்சி தரும் வகையில் திருமலையும் மருதுவும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவனே சிறைப்படவும் நேர்ந்தது.

அறைக்குள் சிக்கிய ஆந்தை வாளா இருந்துவிடவில்லை. எப்படி இருக்க முடியும் அவனால்? பெரியவர்களின் பெரிய வீடுகளில் மர்ம அறைகளும் இரகசிய வழிகளும் இருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்த விஷயம்தான். முத்துக்களையும் விலை உயர்ந்த பொருள்களையும் வைத்திருந்த அந்த அறை பாதுகாப்பு மிக்கதாய்த்தான் இருக்கும் என்றும் அவன் ஊகித்தான். முந்திய நாள் ஆந்தையும் முத்து வணிகனும் வந்திருந்ததனால், மீண்டும்