இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமைந்திருந்தால், நான் உன்னைப் பட்டினாலும், பொன்னினாலும் - அலங்கரிப்பேன். எல்லாச் செல்வங்களும் பொருந்திய என் அரண்மனையிலேயே நீ வசிக்கலாம்!' என்று சொன்னான்.
பிறகு அவன் அவளைத் தூக்கித் தன் குதிரைமீது வைத்துக் கொண்டான். அவள் அழத்தொடங்கினாள். அப்பொழுது, 'நான் உன்னுடைய நன்மையையே நாடுகிறேன். இதற்காக நீ பின் ஒரு