பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காலத்தில் எனக்கு நன்றி கூறுவாய் ! என்று அவன் சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டிவிட்டான். மற்ற வேட்டைக்காரர் களும் அவனைத் தொடர்ந்து சவாரி செய்தனர்.

கதிரவன் அடையும் பொழுது அவர்கள் தலைநகரை அடைந் தனர்; அரசன் எழிலியைத் தன் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றன். அரண்மனைதான் எவ்வளவு பெரிது, எவ்வளவு அழகு! சுவர்களிலும், முகடுகளிலும் வர்ணம் தீட்டிய பல சித்திரங்கள் காணப்பட்டன. ஆளுல் அவைகளை யெல்லாம் கண்டு களிக்கும் மனப்பான்மையிலா எழிலி இருந்தாள்? அவள் அழுதாள், விம்மினள், அவ்வளவுதான். அரசிக்குரிய உடைகளைப் பணிப் பெண்கள் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்தார்கள். முத்துக்களை அவள் கூந்தலில் சேர்த்துவைத்துப் பின்னினர்கள். தழும்புகளுள்ள அவள் கைகளில் பட்டு உறைகளை மாட்டினார்கள்.

விலை மதிப்புள்ள உடைகளை அணிந்த பின் அவள் மகாராணி யாகவே தோன்றினாள். அதிகாரிகளும் அமைச்சர்களும் தாமாகவே அவளை வணங்கினர். ஆனால் அரசருடைய மதகுரு மட்டும் விலகியிருந்து தலையை ஆட்டினார். அவள் ஒரு சூனியக்காரியாயிருந்து மங்திர வித்தைகள் செய்கிறாளோ என்று அவருக்கு ஐயமிருந்தது.

அவருடைய பேச்சு எதையும் அரசன் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. எழிலிக்காக இன்னிசை விருந்துக்கு அரசன் ஏற்பாடு செய்தான். அவளுக்கு உயர்ந்த அறுசுவை உண்டிகள் பரிமாறச் செய்தான். பிறகு அவள் நந்தவனங்களுக்கும், நடன மண்டபங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டாள். ஆயினும் அவள் மனம் எதிலும் பற்றவில்லை; அவளுடைய பவள இதழ்தளில் புன்னகையே பூக்கவில்லை.

பின்னால் அரசன் ஒரு சிறு அறையைத் திறந்து அவளுக்குக் காட்டினான். தரையிலே பச்சைக் கம்பளங்கள் விரிக்கப் பெற்றி ருந்தன. அவள் முன்பு தங்கியிருந்த குகையைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் இப்படிச் செய்திருந்தான். முட் செடிகளிலிருந்து அவள் உரித்துவைத்திருந்த நார்க் கட்டு அங்கே இருந்தது. அவள் பின்னிவைத்திருந்த சட்டை உயரே தொங்கிக் கொண்டிருந்தது. இவைகளை யெல்லாம் வேட்டைக்காரன் ஒருவன் அதிசயப் பொருள்கள் என்று கருதிக் குகையிலிருந்து எடுத்து வந்திருந்தான்.