இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன் ஒரு காலத்தில் அரச குமாரன் ஒருவன் இருந்தான். அவன் ஒர் இளவரசியை மணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் அவள் உண்மையான அரசகுமாரியாக இருக்க வேண்டும் என்பது அவன் கருத்து. அப்படி ஒருத்தி கிடைப்பாளா என்று அவன் உலகம் முழுதும் பல நாடுகளில் சுற்றிப் பார்த்தான். எத்தனையோ அழகிய இளவரசிகளை அவன் கண்டான். ஆனால் அவர்கள் உண்மையான அரசகுமாரிகளா என்று பார்க்கும்பொழுது, அவர்களில் எவளும் இளவரசனுடைய மனத்திற்கு இசைந்திருக்கவில்லை.
கடைசியாக அவன் தன் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான். எப்படியாவது ஓர் இளவரசியைக் கண்டுபிடித்து அவளைத் நிருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அவன் கவலையில் ஆழ்ந்திருந்தான்.