உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன் ஒரு காலத்தில் ஒரு நகரத்தில் வணிகன் ஒருவன் இருந்தான். அந்த நகரத்தை நீங்கள் பூகோளப் படத்தில் தேடிப் பார்க்க வேண்டாம். அது படத்தில் இராது. வணிகன் பெருஞ் செல்வன். அவன் விரும்பினால், அவனுடைய தெரு முழுதிலும் வெள்ளி ரூபாய்களாகப் பாவியிருக்கலாம். பக்கத்து முடுக்கிலும் வெள்ளித் தகடுகளாகப் பதித்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி ஒன்றும் செய்யவில்லை. பணத்தை என்ன செய்ய வேண்டும், என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் கையிலிருந்து ஒரு ரூபாய் வெளியே போனால், அது ஒரு பவுனாகத்தான் திரும்பி வரும். அவன் அத்தகைய வணிகனாக இருந்தான். ஆயினும் கடைசியில் அவனும் இறக்கத்தான் வேண்டியிருந்தது.

அவனுக்கு ஒரு மகன் இருந்தான். செல்வம் எல்லாம் அவனுக்கே வந்து சேர்ந்தது. அவன் தங்தையைப் போல் செல்வத்தின் அருமையை அறிந்தவனில்லை. நாடகங்களிலும் கேளிக்கைகளிலும் அவன் பணத்தை வாரி இறைத்தான். உயர்ந்த மதிப்புள்ள