பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பண நோட்டுகளைக் கொண்டு அவன் காற்றாடிகள் செய்து பறக்கவிட்டு வந்தான். ஏரியில் ருபாய்களை விட்டெறிந்து சிறுவர்களைக் கொண்டு அவைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லுவான். இப்படியெல்லாம் பணம் குறைய வேண்டும் என்று அவன் எண்ணினான். அவ்வாறே அது குறைந்து தேய்ந்து போய்விட்டது. இறுதியாக அவனிடம் மிஞ்சியிருந்தவை நான்கு ருபாய்களும், ஒரு பழைய மேலங்கியும், இரண்டு மிதியடிகளுமேயாகும். இந்த நிலையில் அவனுடைய பழைய நண்பர்கள் அவனை விட்டுப் பிரிந்தார்கள். அவனுடன் சேர்ந்து தெருவில் நடப்பதற்கே அவர்கள் கூசினர்கள். ஆனால் அவர்களிலே கல்வவன் ஒருவன் இருந்தான். அவன் தன் நண்பன் மேற்கொண்டு நகரில் தங்கியிருப்பதில் பயனில்லை என்று கண்டு, அவனுக்கு ஒரு பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தான்.

பெட்டியிலே வைப்பதற்கு வணிகன் மகனிடம் என்ன இருந்தது? இறு அவன் தன் அங்கியை அணிந்து பெட்டியின்மீது அமர்ந்து கொண்டு, அதைப் பூட்டினான். அந்தப் பெட்டி மாயமான ஒன்று. அதன் பூட்டை அழுத்தினால் அது உயரே கிளம்பிச் செல்லும், ஆகவே அது அவனைத் தூக்கிக்கொண்டு அப்படியே ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றது. விமானத்தில் செல்வதுபோல அவன் மேகமண்டலத்தை எல்லாம் தாண்டிச்சென்றன். பெட்டியின் அடிப் பாகத்தில் ஏதாவது ஒசை கேட்டால், அவன் அஞ்சி கடுங்கினன். இவ்வாறு பறந்து சென்று அவன் கடைசியாக துருக்கியர் நாட்டை அடைந்தான். அங்கே அவன் இறங்கிவிட எண்ணிஞன். அவ்வாறே பெட்டி கீழே இறங்கிவிட்டது. ஒரு வனத்தில் பெட்டியை வைக்து, அதன்மேல் காய்ந்த சருகுகளைக் குவித்து முடிவிட்டு, அவன் நகருக்குள்ளே சென்றான். துருக்கியர்கள் நீண்ட மேலங்கியும் மிதியடிகளுமே அணிந்திருந்ததால், அவன் தன் அங்கியை அணிந்து கால்களில் மிதியடிகளை மாட்டிக்கொண்டு சென்றதில் ளிபரீதம் எதுவுமில்லை.

வழியில் அவன் ஒரு தாதிப் பெண்ணைக் கண்டான். அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது. அவன் அவளை அழைத்து, அதோ நகருக்கு அருகிலே தெரியும் பெரிய மாளிகை யாருடையது?" என்று வினவினான்.

'அதில் அரசகுமாரி வசிக்கிறாள்.' என்று அவள் கூறினாள். ஒரு காதலனால் அவளுக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படும் என்று