உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


சோதிடர் சொல்லியிருப்பதால், அரசரும் அரசியும் அவளுடன் இல்லாத நேரத்தில் அங்கே எவரையும் விடுவதில்லை!" என்றும் அவள் தெரிவித்தாள்.

வாலிபன் அவளுக்கு நன்றிசொல்லிவிட்டு, மீண்டும் வனத்திற்குத் திரும்பிச் சென்றான். அங்கே தன் பெட்டியின்மீது அமர்ந்து கொண்டு, அவன் கேராக இளவரசியின் மாளிகை மாடிக்குப் பறந்து

சென்றான். அங்கு ஒரு சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்து இளவரசி இருந்த அறைக்கே போய்ச் சேர்ந்தான்.

அவள் ஒரு கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தாள். அவளுடைய பேரழகைக் கண்டதும் வணிகன் மகன் ஒடிச்சென்று அவளை முத்தமிடாமல் இருக்க முடியவில்லை. இதனால் அவள் திடுக்கிட்டு விழித்தாள். அவன், தான் துருக்கியருடைய தெய்வங்களில் ஒருவன் என்றும், அவளுக்குத் துணையாக இருப்பதற்காக வான வெளியிலே பறந்து வந்ததாகவும் தெரிவித்தான். இதனால் அவளும் வெறுப்படையாமல், மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.