உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வெளியே போவதில்லை. கன்னிகா மடத்துப் பெண்களைக் காட்டிலும் நான் ஒதுக்கமாக, அடக்கமாக இருப்பவள். சந்தைக்குப் போய் வரும் கூடைதான் எங்களுக்கு வெளி உலகச் செய்திகளை அறிவிப்பான். நேற்று அவைகளைக் கேட்ட அதிர்ச்சியில் ஒரு பழைய ஜாடி கூடக் கீழே விழுந்து உடைந்து சிதறிப் போய்விட்டது!' என்று கூறிற்று.

"நீ மிகவும் அதிகமாய்ப் பிதற்றுகிருய்!" என்று அருகிலிருந்த தீக்கல் பெட்டி சீறிப் பாய்ந்தது. அது சிக்கி முக்கி என்ற தீக்கல்லில் செய்யப்பட்டிருந்ததால், அதில் எது உரசினாலும் தீப்பொறிகள் பறக்கும். அதுவும் இரும்புச் சட்டியும் பொருத பொழுது அறைப் பொறிகள் பறந்ததில் வியப்பேயில்லை. கடைசியில் பெட்டி, 'மாலைப் பொழுதை நாம் இனிய முறையில் கழிப்போம்!' என்று சொல்லிற்று.

'தீக்குச்சிகள் மறுபடி தலைகளை நீட்டி, நம்மில் யார் யார் உயர் குடிப் பிறப்பு என்பதை முதலில் சொல்லுங்கள்!' என்றன.

'அப்பொழுது ஒரு பீங்கான் தட்டு, "நாம் சொற்பொழிவு செய்ய வேண்டியதில்லை, நண்பர்களாக இருந்து உரையாடுவோம்!" என்று சொல்லித் தன் வரலாற்றைத் தொடங்கிற்று. "முற்காலத்தில் ஜெர்மன் கடற்கரையிலே ஒரு வீட்டு அடுக்களையில் நான் இருந்தேன்."

இதைககேட்ட மற்ற தட்டுகள் யாவும் மேசைமீது துள்ளிக் குறித்து, "எடுப்பே எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது!" என்று ஆரவாரம் செய்தன.

'பீங்கான் தட்டு மேலும் பேசலாயிற்று: "இளமையில் நான் அமைதியான ஒரு குடும்பத்தில் இருந்தேன். அந்த வீட்டில் நாற்காலி, மேசைகள், அலமாரிகள் யாவும் சுத்தமாக இருந்தன. பாத்திரம், பண்டங்கள் எல்லாம் பளபளப்பாகத் துலக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாள் காலையிலும் தரைகூடச் சுத்தமாகக் கழுவப்பட்டிருககும். வாயில் திரைகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சலவை செய்யப்பட்டிருக்கும். பார்த்த இடமெல்லாம் சுத்தம், சுத்தம், சுததம்தான்I"

இதைக் கேட்டுத் துடைப்பம் தலையை ஆட்டிக்கொண்டு, "நீ எவ்வளவு அருமையாகக் கதை சொல்லுகிறாய்! நீ ஒரு பெண்ணாயிருப்பதால் தான் wரு தாதா. இவ்வளவு தெளிவாகவும் இனிமையாகவும் பேச முடிகிறது!" என்று பாராட்டிற்று.