பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

'மேசை மீதிருந்த தட்டுகள் எல்லாம் எழும்பிக் குதித்து ஆரவாரம் செய்தன. +வாளியும் பாராட்டில் கலந்து கொண்டு ஒருமுறை துள்ளிற்று. அதிலிருந்த தண்ணீ ர் தரையில் சிந்தி எங்கும் பரவிவிட்டது.

தட்டுகளின் கும்மாளம் அடங்கவில்லை. அந்த நேரத்தில் உலர்ந்து கிடந்த மலர் மாலை ஒன்றை எடுத்து வந்து துடைப்பம் பீங்கான் தட்டுக்கு அதைச் சூட்டிவைத்தது. 'இன்றைக்கு நான் தட்டுக்கு மாலை சூட்டினால், நாளை அது எனக்கு மாலை போடும்!' என்று துடைப்பம் பெருமையாக ஒரு வார்த்தையும் சொல்லி வைத்தது.

'பீங்கான் தட்டு தான் ஆரம்பித்தது போலவே கதையைக் குறையும், இனிமையாகச் சொல்லி முடித்தது.

உடனே இடுக்கி எழுந்து நின்று தன் இரண்டு கால்களாலும் நடனமாடிக் காண்பித்தது. அது ஒரு காலை மேசைமீது ஊன்றிக் கொண்டு, மற்ற ஒரு காலை எவ்வளவு உயரம் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு ஆடிற்று. தெரியுமா ? பயிற்சி பெற்ற நடன மாதர்கள் கூட அதனிடம் தோற்றுப் போவார்கள். அந்த நடனத் தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நாற்காலியின் உறை, களிப்பு மிகுதியால் படீரென்று இரண்டாக கிழிந்துவிட்டது!

'எனக்கு மாலை யில்லையா?' என்று கேட்டது இடுக்கி. அதற்கும் மாலை சூட்டப் பெற்றது.

"இவர்கள் எல்லாரும் தாழ்ந்த சாதியார்கள்!” என்று தீக்குச்சிகள் எண்ணிக்கொண்டன.

'அங்கிருந்த பொருள்கள் யாவுமே கர்வம் பிடித்தவைகளாக இருந்தன. வெந்நீர் வேம்பா தான் குளிர்ந்திருப்பதால், தன்னால் பாட இயலாது என்று சொல்லிற்று. சமையற்காரி எழுத உபயோகிக்கும் பேனா. கூடத்தில் ஒரு கூண்டில் இருந்த குயிலைக் கொண்டு வந்து இசைபாடச் செய்யலாம் என்று யோசனை கூறிற்று. ஆனால் மற்றவர்கள் தங்களிடையே அந்நியர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று எதிர்த்தார்கள். சந்தைக்காரனான கூடை இடையில் தலையிட்டுச் சமாதானம் செய்ய முன் வந்தான். "எல்லோருக்குமே தலைக்கனம் ஏறியிருந்தால், என்ன செய்வது? இந்த வீட்டையே தலைகீழாகக் கவிழ்த்தால்தான் ஒவ்வொரு பொருளும் தான் இருக்கவேண்டிய