பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


கொளுத்தி வானத்தில் பறக்கவிட்டான். ஆகாயம் எங்கும் ஒளிமயமான பாம்புகள், சக்கரங்கள், வால் நட்சத்திரங்கள், அனல் கோட்டைகள், வேட்டுகள் முதலியவைகள் ஒளிர்வதைக் கண்ட துருக்கியர்கள், உவகையால் துள்ளிக் குதித்தனர். அப்படித் துள்ளுகையில் அவர்களுடைய பாதரட்சைகள் தலைகளுக்கு மேலே பறந்தன.

அத்தனைக்கும் காரணமான மணமகன் உண்மையில் ஒரு தேவனாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

வணிகன் மகன் வனத்தில் இறங்கிய பின்பு, நகரத்தினுள் சென்று மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துவர எண்ணினான். யாருக்கும் இந்த ஆசை இருப்பது இயல்புதானே!

ஆகா, அவன் கேட்ட செய்திகள் எவ்வளவு ஆச்சரியமானவை!