ஒரு காலத்தில் செருக்கு மிகுந்த தீய மன்னன் ஒருவன் இருந்தான். உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் வெற்றி கொள்ள வேண்டும், தன் பெயரைக் கேட்டாலே யாவரும் அஞ்சவேண்டும் என்பது அவன் நோக்கம். அவன் எத்திசை சென்றாலும் வாளும் தீயும் மக்களை வதைத்து வந்தன. அவனுடைய படை வீரர்கள் கதிர் மிகுந்த கழனிகளைச் சமட்டி அழிப்பார்கள்; குடியானவர்களின் குடிசைகளுக்குத் தீ வைப்பார்கள். தீக் கொழுந்துகள் அருகிலுள்ள மரங்களைப் பொசுக்கி, அவைகளில் தொங்கும் கனிகளையும் வெந்து போகும்படி செய்யும். வெந்து கருகிய வீடுகளில், சுவர்களுக்கு அப்பால், மறைவில் கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டிக் கொண் டிருக்கும் பெண்டிரையும் அக்கொடியவர்கள் விடுவதில்லை; மகிழ்ச்சி வெறிகொண்டு அவர்களையும் மானபங்கப்படுத்துவார்கள். பேய்கள் அவர்களைவிட நல்லவைகள் என்று சொல்லலாம்.
எல்லாக் கொடுமைகளும் நியாயமானவை என்றே மன்னன் கருதிவந்தான். அதிர்ஷ்டம் அவனைத் தொடர்ந்து வந்தது. நாளுக்கு