உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சக்கரவர்த்தி, நான் அதைப்பற்றிப் படித்த புத்தகம் ஜப்பானிய சக்கரவர்த்தியால் அனுப்பப்பட்டது. ஆதலால் அதில் பொய் இராது. இந்தக் குயிலின் இசையை நான் கேட்டுத்தான் ஆக வேண்டும்; அதுவும் இன்றிரவில்! அதற்கு நமது பாதுகாப்பை அளிப்போம்; அது வராவிட்டால் நமது அவையிலுள்ளவர்கள் அனைவரையும் இன்றிரவு மிதித்து வெளியே தள்ளவேண்டியது தான்!' என்று மீண்டும் கட்டளையிட்டார்.

'தஸிங்-பே!' என்று கத்திக்கொண்டே, உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் வெளியே ஓடினார். மறுபடி மாடிகள், கூடங்கள் அறைகளுக்குள்ளே ஓடிச் சாடினார். சக்கரவர்த்தியின் அவையைச் சேர்ந்த உறுப்பினர் பலரும், அதிகாரிகள் பலரும் அவர் பின்னால் ஓடினார்கள். குயில், குயில்-உலகமெல்லாம் தெரிந்த, ஆனால் அரசர் அவைக்கு மட்டும் தெரியாத-குயிலைத் தேடிக்கொண்டு எல்லோரும் அலைந்தார்கள்.

கடைசியாகச் சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண் டிருந்த ஒரு சிறுமி, குயிலா? ஓ, எனக்கு நன்றாகத் தெரியுமே அது நன்றாகப் பாடும். ஒவ்வொரு நாள் மாலையிலும் நான் இங்கிருந்து என் தாயாருக்கு உணவு கொண்டு போகும் பொழுது கடற்கரைப் பக்கமாகப் போவேன். அங்கேதான் என் தாய் இருக்கிறாள். உணவு கொடுத்துவிட்டு வனத்தில் நான் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வேன். அபபொழுது குயிலின் இசையை நான் கேட்டிருக்கிறேன். அதன் பாட்டினால் என் கண்களில் நீர்வந்துவிடும். என் தாய் என்னை முத்தமிட்டு அணைத்துக் கொள்வது போல் இருக்கும்!' என்று தெரிவித்தாள்.

உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர், அடுக்களைச் சிறுமி! உன் வேலையைக் காயமாக்குகிறோம், சக்கரவர்த்தி உணவருந்தும் பொழுது நீ நின்று பார்க்க அனுமதிக்கிறோம்---நீ உடனே குயில் இருக்குமிடத்தை எங்களுக்குக் காட்டவேண்டும்! இன்றிரவு அது சக்கரவர்த்தி முன்பு ஆஜராக வேண்டும் என்று கட்டளை பிறந்திருக்கிறது' என்று அவளிடம் தெரிவித்தார்.

-

அவர்கள் எல்லோரும் குயில் கூவும் வனத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் போகும் பாதையில் ஒரு பசு கனைத்தது. அதைக்கேட்டுச் சில அதிகாரிகள், 'அதோ குயில் கூவுகிறது' என்றனர்.