பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெற்றனர். அது வெளியே செல்லுகையில் அவர்கள் குயிலின் கால் களில் நாடாக்களைக் கட்டி, ஆளுக்கு ஒரு நாடாவைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். ஆச்சரியமான இந்த அதிசயப் பறவை பற்றியே நகர மக்கள் அனைவரும் பேசிக் கொண்டனர். ஒருவன் 'கு' என்பான்; மற்றெரு வன் யில் என்பான்-இப்படிப் பையன்களும் தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். புதிதாகப் பிறந்த பதினெரு குழந்தைகளுக்குக் குயில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆல்ை அந்தக் குழங்கை களில் ஒன்றுக்குக்கூட இசை பாடத் தெரியாது. ஒரு நாள் சக்கரவர்த்திக்குக் கட்டு ஒன்று வந்து சேர்ந்தது. அதன் மேலே குயில் என்று எழுதியிருந்தது. அதைக் கண்டு, அவர், குயிலைப் பற்றி இன்னும் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று சொன்னர். ஆனல் அது புத்தகமில்லை. ஒரு சிறு பெட்டியில் செயற்கை யாக அமைக்கப்பட்ட குயில் ஒன்று இருந்தது. அது ஒரு கலைஞனு டைய சிருஷ்டி. அது உயிருள்ள குயிலைப் போலவே யிருந்தது. ஆளுல் அதன்மீது வயிரங்களும், மாணிக்கங்களும், நீலக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அதன் வால் அசையும் பொழுது வெள்ளியும் தங்கமும் மின்னிக் கொண்டிருந்தன. அதன் கழுத்தில் ஒரு சீட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது. அதில், ஜப்பானியச் சக்கரவர்த்தியின் இங்தக் குயில் சீனச் சக்கரவர்த்தியின் குயிலுடன் ஒப்பிட இயலாது' ான்று எழுதியிருந்தது. ஒவ்வொருவரும் அங்தக் குயிலேப் பார்த்து, ஆகா, என்ன அழகு என்று வியந்தனர். அதைக் கொண்டுவந்து சேர்த்தவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/46&oldid=736191" இலிருந்து மீள்விக்கப்பட்டது