பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அடியிலிருந்து பாடத் தொடங்கிலுைம், கேட்கத் தயாராயிருந்தனர். ஆளுல் சக்கரவர்த்தி, ஒரு மாறுதலுக்காக உயிருள்ள குயில் ஒரு முறை பாடட்டும்! என்ருர் ஆல்ை அந்தக் குயிலைக் காணவில்லை. அது சாளரத்தின் வழியாக வெளியே பறந்து போய்விட்டது. மீண்டும் தன் வனத்திற்கே போய்விட்டது. இது என்ன அதிசயம்' என்ருர் சக்கரவர்த்தி, அது ஒரு கன்றி கெட்ட பறவை' என்றனர் அமைச்சர்களும், அதிகாரிகளும். ஆயினும் தலைசிறந்த குயில் ஒன்று நம்மிடம் இருக் கிறதே! நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே செயற்கைக் குயில் மீண்டும் பாடிக் கொண் டிருந்தது. ஒரே இசையை முப்பத்து கான்காவது தடவையாக எல்லோரும் கேட்டு ரசித்தனர். உண்மையான குயிலைப் பார்க்கிலும் அதுவே மேலானது என்று சங்கீத வித்துவான் உறுதி கூறினர். வெளியில் மட்டு மல்லாது, அதன் உள்ளேயும் அழகு செறிந்திருக்கிறது என்பது அவர் கருத்து. பிறகு அவர் இரண்டு குயில்களுக்கும் உரிய வேற்றுமை களையும் விளக்கிச் சொன்னர் : உயிருள்ள குயில் என்ன பாடப் போகிறது என்பது நமக்கு முன்னதாகத் தெரியாது; செயற்கைக் குயிலில் அது இன்னதுதான் பாடும் என்பது முன்கூட்டியே நமக் குத் தெரியும்; உண்மைக் குயிலின் உள்ளே என்ன இருக்கிறது என் பது நமக்குத் தெரியாது; செயற்கைக் குயிலை நாம் கழற்றி உள்ளே யிருக்கும் கருவிகளை யெல்லாம் பார்க்கலாம் ! எல்லோரும் அவர் கூற்றையே ஆதரித்தனர். அடுத்த ஞாயிற்றுக் கிழமை செயற்கைக் குயிலைப் பொதுமக்களுக்குக் காட்டு வதற்குரிய அநுமதியும் சங்கீத வித்துவானுக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறே அது காட்டப்பெற்றது. அன்றும் அது பாடிற்று. மக்கள் முக்குகளின்மேல் விரல்களை வைத்துக்கொண்டு, தலைகளை ஆட்டி இதுவே அதிசயம்! இதற்கு ஈடில்லை' என்று பாராட்டி ஞர்கள். ஆல்ை உண்மைக் குயிலின் இசையை அடிக்கடி கேட்டி ருந்த ஒரு மீனவன் மட்டும், இதன் இசை நன்றகத்தான் இருக்கிறது, ஆயினும் உண்மைக் குயிலின் இசைக்கும் இதற்கும் ஏதோ வேற் றுமை இருக்கிறது. அது இன்னது என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை I என்று கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/48&oldid=736193" இலிருந்து மீள்விக்கப்பட்டது