பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்க முடியாத குளிர்; பனி பெய்துகொண்டிருந்தது; மாலை மயங்கி இருள் படர்ந்து கொண்டிருந்தது. இத்துடன் அன்று ஆண்டின் இறுதி நாள்; பொழுது விடிந்தால் புது வருடப் பிறப்பு. குளிரிலும் இருளிலும் ஏழைச் சிறுமி ஒருத்தி தெருக்களின் வழியாக கடமாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய தலைமீது செவிகளே மறைத்துக் கட்டும் துணியில்லை; பாதங்களில் மிதியடிகள் βδού8,υ, வீட்டைவிட்டுப் புறப்படும்பொழுது அவள் தன் தாயின் பழைய பெரிய மிதியடிகளே அணிந்து கொண்டுதான் வந்தாள். ஆளுல் வழியில், வேகமாக ஓடிக்கொண்டிருந்த இரண்டு வண்டிகளுக்கு இடையே அவள் ஒடிச் சென்று, சாலையைக் கடக்க வேண்டியிருந் தது. அப்பொழுது மிதியடிகள் அவளுடைய கால்களை விட்டுக் கழன்று விழுந்துவிட்டன. பின்னல் அவள் தேடிய பொழுது ஒரு மிதியடிதான் அகப்பட்டது; மற்றதை ஒரு பையன் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். தன்னுடைய பொம்மையை வைத்துத் 1799–7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/53&oldid=736199" இலிருந்து மீள்விக்கப்பட்டது