54 தொட்டிலாட்டுவதற்கு அது பயன்படும் என்று அவன் எண்ணி யிருப்பான். பனி மழையில் சிறுமி தன் சின்னஞ் சிறு பாதங்களால் தரையை மிதித்து கடந்துகொண்டே யிருந்தாள். அவளுடைய முன்முனையில் ஏராளமான தீப்பெட்டிகள் இருந்தன; கையிலும் திப் பெட்டிக் கட்டுகள் இருந்தன. அன்று பகல் முழுதும் அவளிடம் எவரும் திப்பெட்டி வாங்கவில்லை; யாரும் ஒரு பைசாகூட அவளுக்குக் கொடுக்கவில்லை. பசி ஒரு புறம், குளிர் ஒரு புறம். பனியால் உடல் மரத்துப் போய்விட்டது. அந்தோ பாவம் விரிந்து தோள்களின் மீது பரந்து கிடந்த அவளுடைய தங்க நிறமான கூந்தலின்மீது பனிச் செதிள்கள் விழுந்துகொண்டே யிருந்தன. சுருட்டை சுருட்டை யாக அடர்ந்திருந்த தன் தலைமயிரின் அழகைப் பற்றிச் சிந்திக்க வறுமையிலே வாடி வதங்கிய அப் பெண்ணுக்கு நேரம் ஏது? எல்லா வீடுகளின் சாளரங்களிலும் பளிரென்று வெளிச்சம் தெரிந்துகொண்டிருந்தது. அவைகளின் வழியாக உள்ளே சமைத்து வைத்திருந்த இறைச்சி முதலிய உணவுப் பொருள்களின் நறுமண மும் வந்துகொண் டிருந்தது. அன்று மக்கள் முக்கியமாக முழு வாத்தை வாட்டி வதக்கி உண்பது வழக்கம். அந்த வாடை வந்த வுடன் சிறுமிக்கு அதன் நினைவு உண்டாயிற்று. வழியில் ஒரு விட்டுக்கு அடுத்த விடு சற்று முன்னல் தெருப் பக்கம் நீண்டிருந்ததால், இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒரு மூலை இருந்தது. அந்த முனையை அடைந்ததும், சிறுமி கால்கள் தள்ளாடி, குனிந்து கீழே அமர்ந்தாள். பனிச் செதிள்களே மிதித்து மிதித்து விறைத்திருந்த பாதங்களே இழுத்து அவள் தன் உடலோடு சேர்த்து வைத்துக்கொண்டாள். ஆயினும் அவளால் குளிரைத் தாங்க முடிய வில்லை. அவள் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும் இயல்ாது; ஏனெனில் அவள் அன்று ஒரு தீப்பெட்டிகூட விற்கவில்லை; கையில் ஒரு காசுகூட இல்லை; இதற்காக அவளுடைய தங்தை அவளே அடித்து வதைப்பார். மேலும் திறந்த வெளியைப் பார்க்கிலும் அவள் விடு அதிக வசதியுள்ளதும் அன்று. விட்டுக் கூரையில் பல இடைவெளிகளும் துவாரங்களும் இருந்தன. ஒலை யில்லாத இடங் களில் வைக்கோலும் கந்தல் துணிகளும் வைத்து அடைக்கப்பட் டிருந்தன. எனினும் பனி மழையும் காற்றும் கூரை வழியாக வீட்டி துள் புகுந்ததால் அங்கேயும் குளிர் நடுக்கிக்கொண்டுதான் இருக்கும்.
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/54
Appearance