55
சிறுமியின் சிறு கைகள் விறைத்துப் போயிருந்தன. அப்பொழுது ஒரு திக்குச்சியைக் கொளுத்தினால் எவ்வளவு உதவியாயிருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆனால் மரத்துப் போன கைகளால் தீப்பெட்டியை எடுப்பது எப்படி, குச்சியைச் சுவரில் கீச்சி நெருப்புண்டாக்குவது எப்படி? அவள் மிகவும் சிரமப்பட்டு ஒரு குச்சியை எடுத்துவிட்டாள்! கீச்சியவுடன் அது எவ்வளவு பிரகாசமாக எரியத் தொடங்கியது சுற்றிலும் சிறிது சூடு உண்டாகி
விட்டது அவள் தீயின்மேலே ஒவ்வொரு கையாகச் சிறிது நேரம் காட்டினாள். குச்சி எரியும்பொழுது சுற்றிலும் ஒளிமயமாயிருந்தது. விடுகளிலே குளிர் காயும் கணப்புச் சட்டியின் முன்னால் இருப்பது போல, அவளுடைய உடலுக்கு வெதுவெதுப்பாயிருந்தது. கால்களுக்கும் சூடு உண்டாக்குவதற்காக அவள் தன் கால்களையும் மெதுவாக முன்புறம் நீட்டிக்கொண்டாள். தீக்குச்சி அணைணந்து போய் விட்டது. அந்த குச்சியை விரல்களால் பிடித்துக்கொண்டே அவள் சிறிது நெரம் அமர்ந்திருந்தாள்.