60 'கிழவி, உன் அன்புக்கு நன்றி ! அதோ இருக்கும் பெரிய மரத்தைப் பார்த்தாயா ? என்று சூனியக்காரி பேசத் தொடங்கிள்ை அது உள்ளே முழுதும் உளுத்துப் போனது. அதன் உச்சியில் ஏறு. அங்கிருந்து கீழே ஒரு பெரும் புழை செல்கிறது. அதன் வழியாக நீ கீழே அடிமரம் வரை இறங்க முடியும். உன் இடையைச் சுற்றி நான் ஒரு கயிற்றைக் கட்டி வைத்துக் கொள்கிறேன். உனக்கு எப்பொழுது வெளியே வர வேண்டுமோ, அப்பொழுது நான் உன்னை மேலே இழுக் கிறேன்." சிப்பாய், மரத்தடியிலே போய் நான் என்ன செய்ய வேண் டும் ? என்று வினவினன். பணத்தை எடுத்து வர வேண்டும்!" என்ருள் மங்திரக் கிழவி. 'நீ அடித்தளத்திற்குப் போனவுடன் அங்கே ஒரு பாதை இருக்கும். அங்கே ஒளி மிகுந்த நூறு விளக்குகள் எரிவதால், மிகவும் பிரகாசமா யிருக்கும். நீ மூன்று கதவுகளைக் காண்பாய். திறவு கோல்கள் கதவுகளிலேயே இருக்கும். நீ முதல் அறைக்குள் சென்றல், அங்கு தரையில் ஒரு பெரிய பெட்டி இருக்கும். அதன் மேல் ஒரு காய் அமர்ந்திருக்கும். நாயின் கண்கள் தோசைக் கற்களைப் போல் அகலமாயிருக்கும், அவற்றை நீ பொருட்படுத்த வேண்டாம். கான் என்னுடைய நீலக் கட்டம் போட்ட துணி ஒன்றைத் தருகிறேன். நீ அதைத் தரையில் விரித்து, அதன்மீது காயைத் துாக்கி வை. பிறகு பெட்டியைத் திறந்து உனக்கு வேண்டிய நாணயங்களையெல் லாம் எடுத்துக்கொள். ஆணுல் அவை யாவும் செப்பு நாணயங்கள். உனக்கு வெள்ளி வேண்டுமானல், அடுத்த அறைக்குள்ளே போ. அங்கு திரிகை மூடி போன்ற பெரிய கண்களையுடைய காய் ஒன்று இருக்கும். நீ கவலைப்பட வேண்டாம். அதை என் துணியின் மேல் துக்கி வைத்துவிட்டு, பெட்டியிலிருந்து வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொள். உனக்குத் தங்க நாணயங்கள் தேவையாளுல், மூன்ருவது அறையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அங்குள்ள நாயின் கண்கள் தேர்த்தட்டு மாதிரி இருக்கும். பயப்படாமல், அதைத் துாக்கி என் துணிமேல் வைத்துவிட்டு, நீ பெட்டியிலிருந்து தங்கப் பவுன்களை அள்ளிக் கொள்ளலாம்! இவ்வளவுதான ? சரி, உனக்கு நான் என்ன தர வேண்டும் ? உனக்கும் ஏதாவது கொடுக்க வேண்டியது கடமைதானே! என்ருன் போர் வீரன்.
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/60
Appearance