63
இல்லை. அதை நோக்கி வணக்கம்! என்ருன். நாய் சிறிது மேரம் அவனை உற்றுப் பார்த்து விட்டு, மெளனமா யிருந்தது. உடனே அவன் காயைத் துாக்கித் துணியின் மேல் வைத்து விட்டுப்பெட்டி யைத் திறந்தான். அதனுள் தங்கப் பவுன்கள் குவிந்திருந்தன. அந்தப் பவுன்களைக் கொண்டு டில்லி நகரத்தையே விலைக்கு வாங்கி விடலாம்! மேலும் எத்தனை பண்டங்கள், பொம்மைகள், அரிய பொருள்கள் வாங்கிக் கொண்டேயிருக்கலாம் என்று அவன் எண்ணினன். அவன் தான் சேர்த்து வைத்திருந்த வெள்ளி கான யங்களைத் தரையிலே எறிந்துவிட்டு, தங்க நாணயங்களை அள்ளித் திணித்துக் கொண்டான். சட்டைப் பைகள், கைப்பை, பூட்ஸ்கள், தொப்பி எல்லாவற்றிலும் தங்கம், தங்க நாணயங்கள் ! அவன் பெட்டியைப்பூட்டி, காயை அதன் மேல் உருட்டி வைத்து விட்டு, அறைக்கதவை அடைந்தான்.
பிறகு பாதைக்கு வந்து, ஏ கிழவி' என்னை உயரே தூக்கு, சிக்கிரம் ! என்று உரக்கக் கூவின்ை.
"திக்கல் பெட்டியை எடுத்து வந்தாயா?" என்று வெளியி லிருந்து குரல் வந்தது.
ஐயையோ, மறந்து விட்டேன்' என்று சொல்லி, அவன் மறு படி உள்ளே சென்று, அதை எடுத்து வந்தான். கிழவி கயிற்றை இழுத்து அவனை வெளியே கொண்டு வங்தாள். அவன் மரத்தி லிருந்து கீழே இறங்கின்ை.
தரைக்கு வந்ததும், அவன் கிழவியைப் பார்த்து, இந்தப் பெட்டி உனக்கு எதற்காக?' என்று கேட்டான்.
'உனக்கோ பணம் கிடைத்து விட்டது தீக்கல் பெட்டியை என்னிடம் கொடுத்துவிடு. ஏன், எதற்கு என்ற கேள்விகள் வேண்டாம் !
இதைக்கேட்ட சிப்பாய், வெட்டிப்பேச்சு வேண்டாம், ஒழுங் காகப் பதில் சொல். நீ அதை என்ன செய்யப் போகிருய் என்று சொல்லா விட்டால் நான் வாளே உருவி உன் தலையைச் சீவி விடு வேன்! என்று சீறின்ை.
"நான் சொல்ல முடியாது!’ என்ருள் சூனியக்காரி.
சிப்பாய் அவள் தலையை வெட்டி எறிந்து விட்டான். அவள் உடல் தரையிலே கிடந்தது. அவன் தன்னிடமிருந்த பொற்காசுகள்