ᏮᏮ திக்கல் பெட்டியால் எவ்வளவு செல்வம் கிடைக்கும் என்பதைப் போர்வீரன் தெரிந்துகொண்டான். பெட்டியில் ஒருமுறை கீச்சினுல், செப்புக் காசுகளின் பெட்டிமீது அமர்ந்திருந்த நாய் வந்தது. இரு முறை கீச்சில்ை, வெள்ளிப் பெட்டிமீது அமர்ந்திருந்த காய் வந்தது. மூன்று முறை கீச்சில்ை, தங்கப் பெட்டிமீது அமர்ந்திருந்த காய் வந்தது. வீரன் தான் முன்பு இருந்த பெரிய அறைகளில் வசிக்கலானுன். பட்டும் பட்டாடைகளும் வந்து குவிந்தன. பழைய நண்பர்களுக்கு மறுபடி அவனிடம் பாசம் பெருகிவிட்டது. ஒரு சமயம் திடீரென்று அவனுக்கு ஒர் எண்ணம் தோன் றிற்று. எவ்வளவு செல்வங்கள் சேர்ந்திருந்தாலும் அவன் இளவர சியைப் பார்க்க முடியவில்லையே! அவளுக்கு இணையான அழகியே கிடையாது என்று எல்லோரும் மெச்சி வந்தனர். ஆயினும் அங்தப் பேரழகி செம்பினுல் செய்த மாளிகையில், எவர் கண்ணிலும் படாமல் சிறையிருப்பதால் யாது பயன்? அவளை எப்படியாவது பார்த்தாக வேண்டும். இந்தச் சிந்தனையுடன் அவன் தீக்கல் பெட்டியை ஒரு முறை கீச்சின்ை. தோசைக்கல் கண்களைச் சுழற்றிக் கொண்டு நாய் வந்து தோன்றிற்று. இப்பொழுது கள்ளிரவு ஆகியிருக்கும், ஆயினும் நான் இளவரசியைப் பார்க்கத் துடித்துக்கொண் டிருக்கிறேன். ஒரு கணப் பொழுதேனும் நான் அவளைப் பார்த்தாக வேண்டும்! என்று அவன் நாயிடம் கூறிஞன்.
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/66
Appearance