பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 67

   ஒரு விநாடிக்குள் நாய் வெளியே சென்றது. போர்வீரன் மறு படி அரசகுமாரியைப்பற்றி எண்ணுவதற்குள் தன் முதுகில் இள வரசியை ஏற்றிக்கொண்டு, அங்கு வந்து கின்றது. அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். கல்லும் புல்லும் கண்டு உருகும்படி யிருந்த அவளுடைய ஏழில், இவளே உண்மையான இளவரசி என் JJJ கட்டியம் கூறிற்று. சிப்பாய் அமைதியா யிருக்க முடியவில்லை. அவன் எழுந்து சென்று அவளே முத்தமிட்டான்.
  பிறகு நாய் இள வரசியை அவளுடைய மாளிகையில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்ட்து. மறுநாள் காலையில் அரசரும் அரசியும் பலகாரம் உண்டுகொண் டிருக்கையில், இளவரசி தான் முக்திய இரவில் ஒரு கனவு கண்டதாக அவர்களிடம் சொன்னுள். நாய் ஒன்றின்மீது ஏறிக்கொண்டு சென்றதாயும், தன்னை ஒரு சிப்பாய் முத்தமிட்டதாயும் அந்தக் கனவில் தெரிந்தது என்று அவள் கூறினுள்.

'நல்ல வேடிக்கையான கதைதான்! என்ருள் இராணி.

    இதற்குப்பின், இரவில் இளவரசியின் கட்டிலருகே தங்கி யிருந்து காவல் காப்பதற்காக, வயதான தாதி ஒருத்தி நியமிக்கப் பட்டாள். இளவரசி சொன்னது கனவா, அல்லது உண்மையில் நிகழ்ந்ததா என்பதில் இராணிக்குச் சந்தேகம் இருந்தது.
   அன்றிரவும் சிப்பாய் இளவரசியைக் காண விரும்பினன். மறு படி நாயை அனுப்பின்ை. அது அவளே முதுகின்மேல் வைத்துக் கொண்டு, எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடிச் சென்றது. தாதி தன் மிதியடிகளை மாட்டிக்கொண்டு, அதைப் பின் தொடர்ந்து ஓடினுள். நாய் ஒரு பெரிய கட்டிடத்துள் நுழை வதைக் கண்டு, அவள் அந்த வீட்டின் வாசலில் ஒரு சிலுவை அடை யாளம் பொறித்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினுள். அங்கே அவள் படுக்கையில் படுத்ததும், நாயும் இளவரசியுடன் அங்கு திரும்பி விட்டது.
   சிப்பாய் விடுதி வாயிலில் சிலுவைச் சின்னம் ஒன்று இருப் பதைக் காலையிலே கண்டதும், அதைப்போல் நகரத்தில் பல வீடு களில் அதே மாதிரிச் சின்னங்களைப் பொறித்து வைத்தான். பல சிலுவைகளைக் கண்டால் அரசருக்கு உண்மையான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவன் யூகித்துக்கொண்டான்.