69
அடுத்த நாள் காலையில் அவன் தன் அறையிலிருந்த சிறு சாள ரத்தின் வழியாக எட்டிப் பார்த்தான். அவனைத் துக்கிலிடும்போது பார்க்கவேண்டும் என்று ஜனங்கள் நகருக்கு வெளியே திரள் திர ளாகச் சென்று கொண்டிருந்தனர். பட்டாளத்தார்கள் முரசு கொட்டிக்கொண்டு அணி வகுத்துச் சென்றனர். உலகமே ஒன்ருகத் திரண்டு செல்வதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. அந்த வழியாக ஒரு பையனும் ஒடிக் கொண்டிருந்தான். ஒடிய ஒட்டத்தில் அவ னுடைய கால் செருப்பு ஒன்று கழன்று சிறைச் சாளரத்தின் அடியில் போய் விழுந்தது.
அப்பொழுது அறையுள் இருந்த போர்வீரன், பையா, ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிருய்? நான் இங்கேதான் இருக்கிறேன். நான் அங்கே போகாமல் என்னை எப்படித் துக்கிலிட முடியும்? ஆகையால் அவசரம் வேண்டாம். எனக்காக நீ உடனே ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கால் ரூபாய் தருகிறேன். நான் இருந்த விடுதிக்குச் சென்று, அங்கே என் அறையிலுள்ள சிறுதிக்கல் பெட்டியை நீ எடுத்துக்கொண்டு வரவேண்டும்' என்று சொன்னன்.
கால் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, பையன் விடுதிக்கு ஓடிச் சென் ருன் பெட்டியைக் கொண்டுவந்து வீரனிடம் கொடுத்துவிட்டான். பிறகு என்ன நடந்தது?
நகருக்கு வெளியே நெடிய துக்கு மரம் ஒன்று கடப்பட் டிருந்தது. அதைச் சுற்றிப் படை வீரர்கள் கின்றனர். அவர்களுக்கு அப்பால் நகர மக்கள் கூடியிருந்தனர். நீதிபதிகளும், மந்திரிகளும் இருந்த இடத்திற்கு நேர் எதிரில் அரசரும் அரசியும் ஓர் அரியணை யில் அமர்ந்திருந்தனர்.
சிறையிலிருந்த நம்முடைய சிப்பாயும் அங்கே கொண்டு வரப் பட்டான். அவன் கழுத்தில் கயிறு மாட்டப்பெறும் நேரத்தில், அவன் அதைத் தடுத்து, ஒர் வேண்டுகோள் விடுத்தான். கடைசி நேரத் தில், சாகப்போகிறவன் கேட்கும் சாதாரணப் பொருளே அளிப்பது வழக்கம். எனக்கு ஒர் அநுமதி வேண்டும். நான் புகை பிடிப்பது வழக்கம். ஒரு முறை இப்பொழுது புகை பிடிக்க அநுமதி வேண்டும்'
அரசர் அநுமதித்தார். அவன் தன் தீக்கல் பெட்டியை எடுத்து அதில் மூன்று முறை உருக்கைக்கொண்டு கீச்சின்ை.உடனே மூன்று நாய்களும் அங்கே தோன்றிவிட்டன-தோசைக்கல் கண் களையுடைய நாயும், தேர்த்தட்டுக் கண்களையுடைய காயும் அவன் ஏணி அடியில் வந்து கின்றன.
1799-9