70 அவைகளைப் பார்த்து வீரன், என்னைக் காப்பாற்றுங்கள்! வன்ஜனத் தூக்கிலிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூவின்ை. உடனே காய்கள் காலு பக்கங்களிலும் பாய்ந்தன. படை வீரர்கள். அதிகாரிகள் முதலியோர்களை அவைகள் காலைப் பற்றியும், கையைப் பற்றியும், மூக்கைப் பற்றியும் பிடித்திழுத்து ஆகாயத்தில் துக்கியெறிந்தன. மேலே இருந்து கீழே விழுந்த வேகத்தில் அவர்கள் முறிந்த எலும்புகளுடன் சிதறி விழுந்தனர். நான் ஒன்றும் செய்யவில்லை, தண்டிக்கவில்லை! என்று அரசர் உரக்கக் கத்தினர். ஆனல் மிகப் பெரிய அசுர காய் ஒன்று அவரை யும் இராணியையும் ஆகாயத்திலே தூக்கி எறிந்துவிட்டன. மற்ற வர்களுக்கு கேர்ந்த கதியே அவர்களுக்கும் நேர்ந்தது. எஞ்சியிருந்த படை வீரர்கள் அஞ்சி கடுங்கினர். ஜனங்கள் ஏணியின்மேல் கின்ற போர்வீரனைப் பார்த்து, நீ நல்லவன் நீயே எங்கள் அரசன யிரு, இளவரசியை நீயே மணந்துகொள்' என்று கூவிஞர்கள். பிறகு சிப்பாயை அரசருடைய இரதத்தில் அமர்த்தினர்கள். அதற்கு முன்னல் மூன்று நாய்கள் கடனம்ாடிக் கொண்டு சென்றன. மக்கள் ஆரவாரம் செய்தார்கள். இளைஞர்கள் கைவிரல்களை மடித்து வாயில் வைத்துக்கொண்டு சீழ்க்கையடித்தார்கள்."படைவீரர்கள் புதி தாக அணிவகுத்து நின்று மரியாதை செய்தார்கள். இளவரசி தனது செப்பு மாளிகையைவிட்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தாள். ஒரு வாரத்திற்குப்பின் அவளுக்கும் புதிய அரசனுக்கும் திருமணம் படம் தேறியது. திருமணப் பந்தலில் ஒரு தனி மேடைமீது மூன்று காய் களும் அமர்ந்து பயங்கரமான தங்கள் கண்களை உருட்டி விழித்துக் கொண்டிருந்தன.
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/70
Appearance