பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீல்லாடி நாட்டுப் புறத்திலே ஒரு காலத்தில் ஒரு பழைய மாளிகையில் பெரியதனக்காரர் ஒருவர் இருந்தார். அவருடன் இரண்டு பிள்ளை களும் வசித்திருந்தனர். அந்த இருவரும் அரசிளங் குமரியை விவாகம் செய்துகொள்ள விரும்பினர். அவள் எவன் தன்னைப்பற்றி அதிகம் பேசுகிருனே அவனை மணந்துகொள்வதாக விளம்பரம் செய் திருந்தாள். அதல்ைதான் சகோதரர்கள் தாமும் போட்டியிட்டு, இருவரில் ஒருவன் அவளை அடையலாம் என்று நம்பிக்கொண் டிருந்தனர் இருவரும் நகரத்திற்குப் புறப்படுவதற்கு ஒரு வாரமாகத் தங் க2ள ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒருவன் லத்தின் மொழியிலுள்ள அகராதியை மனப்பாடம் செய்து கரைத்துக் குடித் தான்; மூன்று வருடமாக வந்த பத்திரிகைகளையும் உருத் தட்டினன். அவைகளை முதலிலிருந்தோ, கடைசியிலிருந்தோ ஒப்பிக்க அவல்ை முடியும். இரண்டாமவன் நகர்மன்றச் சட்டங்களைப்பற்றி ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/71&oldid=736219" இலிருந்து மீள்விக்கப்பட்டது