பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இங்கு அறையெல்லாம் கொதிக்கிறது என்று அவ ன் சொன்ஞன். "நான் கோழிக் குஞ்சுகளை வாட்டிக்கொண் டிருப்பதுதான் காரணம், என்று இளவரசி தெரிவித்தாள். கில்லாடி, அதுவும் நல்லதுதான் எனக்கு ஒரு காகத்தையும் வாட்டித் தரலாம் என்று நம்புகிறேன்! என்று கேட்டான். இராஜகுமாரி, ஆகா, வாட்டலாம் ஆல்ை வாட்டுவதற்கு என் னிடம் சட்டியுமில்லை, தட்டுமில்லையே! உம்மிடம் ஏதாவது இருக் கிறதா?’ என்ருள். இருக்கிறது! என்று சொல்லி, கில்லாடி, மரத்தில் செய்த ஜோட்டினை எடுத்து, அதனுள் காகத்தை வைத்தான். அதனுடன் சேர்த்து வதக்குவதற்கு இங்கு ஒன்றுமில்லையே! என்ருள் இளவரசி. கானே கொணர்ந்திருக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, அவன் தன் பைகளிலிருந்த மணலில் கொஞ்சம் எடுத்து ஜோட்டினுள் போட்டான். இன்னும் வேண்டுமானுலும், இருக்கிறது என்ருன். 'உமது பேச்சை நான் விரும்புகிறேன். எந்த விஷயத்திற்கும் நீர் ஒரு பதில் வைத்திருக்கிறீர். உம்மைப் பற்றியே பேசவும் உம் மிடம் விஷயமிருக்கிறது. உம்மையே நான் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். ஆளுல், இங்கு நாம் பேசிய ஒவ்வொரு சொல்லும் காளை பத்திரிகையில் வெளிவரும் என்பது உமக்குத் தெரியுமா? இதோ சாளரங்களில் இருந்துகொண்டு எழுதுகிறவர்கள் அனைவரும் கிருபர்கள். ஒவ்வொரு சாளரத்திலும் சட்டநிபுணரான ஓர் அதிகாரி யும் இருக்கிருர் சட்டநிபுணர்களுக்கோ ஒன்றும் புரியாது' இதைக் கேட்டவுடன் நிருபர்களுக்குத் துக்கிவாரிப் போட் டது. அவர்களுடைய பேணுக்களிலிருந்து தரையெல்லாம் மை சிக் திற்று. - - கில்லாடி அவர்களைத் திரும்பிப் பார்த்து, ஓ, இவர் கள் எல்லோரும் நாகரிகக் கனவான்கள்! இவர்களில் மேலான சட்ட கிபுணர்களுக்கு மட்டும் என்னிடமுள்ள பரிசைக் கொடுக்கத்தான் வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டே அவர்கள் கண்களில் மணலை வாரி வீசின்ை. +

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/78&oldid=736226" இலிருந்து மீள்விக்கப்பட்டது