உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

________________

8 எழிலி விம்மினாள், அழுதாள், தன் அருமைச் சகோதரர்களைப் பற்றி எண்ணினாள். அவளும் அரண்மனையை விட்டு வெளியேறி னாள். பகல் முழுதும் பல புல்வெளிகளிலும், சதுப்பு நிலங்களிலும் அவள் நடந்து திரிந்தாள். இறுதியில் ஒரு வனத்தை வந்தடைந் தாள். எங்கே செல்ல வேண்டும் என்பதோ, எப்படிச் செல்ல வேண்டும் என்பதோ அவளுக்குத் தெரியவில்லை. அவள் உள்ளத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. தன் சகோதரர்களைக் கண்டு பிடிக்க எங்கேயாவது நடந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள். ஆனால் அவள் வனத்தினுள் நுழைந்ததும் இருட்டிவிட்டது. அவள் 'ஆண்டவனைத் தொழுதுவிட்டு, புல்லையே பாயாகக் கொண்டு, ஒரு வேரில் தலைசாய்த்துக் கீழே படுத்தாள். சுற்றிலும் அமைதியாயிருந்தது. காற்றும் ஓசையில்லாமல் தவழ்ந்து சென்றது. நூற்றுக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் அவளைச் சூழ்ந்து பறந்து பச்சை நிறமாக ஒளிவீசிக்கொண்டிருந்தன. காலையில் அவள் எழுந்தவுடன், அருகிலிருந்த ஒரு பொய்கையில் முகம் கழுவுவதற்காகச் சென்றாள். அங்கே அவள் நீருள் தன்முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். தன் கோரமான உருவத்தை மாற்றிக் கொள்வதற்காக அவள் தண்ணீரைக் கொண்டு முகத்தையும் தலையையும் நன்றாகத் தேய்த்துக் கழுவினாள். பிறகு நீருள் பார்த்த பிறகுதான் அவள் உண்மையான அரசகுமாரி என்று தெரிந்தது. வனத்திலே சிறிது தூரம் நடந்து செல்லும் பொழுது அவள் ஒரு கிழவியைக் கண்டாள். கிழவியிடம் பேரிக்காய்கள் நிறைய இருந்ததால், இருவரும் அவைகளில் சிலவற்றைத் தின்று பசியாறினர். சாப்பிடும்பொழுது எழிலி தன் சகோதரர்களான பதினொரு இளவரசர்களைக் கண்டது உண்டா என்று கிழவியிடம் கேட்டாள். இல்லை, நான் பதினொரு பேர்களைக் கண்டதில்லை. ஆனால் நேற்று ஓர் ஆற்றில் பதினொரு அன்னங்கள் நீந்திக்கொண்டிருப்ப தைப் பார்த்தேன். அவைகளின் தலைகளில் சிறு தங்கக் கிரீடங்களும் இருந்தன!' என்றாள் கிழவி. பிறகு அவள் எழிலியை அந்த ஆற்றுக்கு அழைத்துச் சென் றாள். இளவரசி அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆற்றின் போக்கி லேயே கரையில் நெடுந்தூரம் நடந்து சென்றாள். ஆறு இறுதியில் கடலில் போய் விழுந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/8&oldid=1542200" இலிருந்து மீள்விக்கப்பட்டது