பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

5

விட்டு ஒளியுமிழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று அன்னிபெசண்ட் அம்மையார், மற்றொன்று அன்னை தெரசாவாகும்!


இரண்டு பேருமே எதிர்ப்புகளைக் கண்டு ஏறுபோல் போராடி முறியடித்த வீராங்கணைகளாவர் ஒருவர் அரசியல், சமுதாயவியல் ஆன்மீகவியல், வாழ்வியல் மதவியல்; பெண்ணியல் போன்றவற்றிலே பீடுநடை போட்ட அன்னிபெசண்ட் அம்மையார்!


மற்றவர், அரசியலைப் பற்றிய சிந்தனையே தேவையற்றது; மக்கள் வளவாழ்வே நலவாழ்வு என்று நம்பி; சமுதாயத் தொண்டே உலகம் போற்றக்கூடியது என்பதுணர்ந்து, மக்கள் நலத் தொண்டர்ற்றிய சமூக சேவைத் துறையின் முடிசூடா ராணியான அன்னை தெரசா என்பவர் ஆவார்.


இங்கே நாம் அன்னிபெசண்ட் அம்மையின் வரலாற்றுச் சம்பவங்களைப் பார்க்கிறோம்! அவ்வளவுதான்!


இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் இலண்டன் அந்த நாட்டில் "உட்" என்ற் பாரம்பரியக் குடும்பப் பெயரோடு வாழ்ந்தவர் வில்லியம் உட்; இவர்தான் அன்னியின் தந்தை இவர் டப்ளினில் உள்ள டிரினிடி கல்லூரியில் படித்தவர் டப்ளின் பல்கலைக் கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்று டாக்டர் பணி புரிந்தவர்:


கூர் ஆறிவாளர் வில்லியம்; மெத்தப் படித்தக் கல்வியாளர்; தத்துவம் படித்தவர்; கணிதத்தில் வல்லவர் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம மொழிகளில் புலவர் எந்த கரியத்தில் ஈடுபட்டாலும் கிரேக்கர்களைப்போல, ஏன்? எப்படி? எதற்காக என்ற வினாக்களை விடுத்தே செயலாற்றலில் இபடுவார்;