பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அன்னி பெசண்ட் அம்மாவின் பெயர் எமிலி லோரிஸ்; "மோரீஸ்", என்ற குடும்பப்பாரம்பரியப் பெயரைப் பெற்றவர்; அவர் கணவருக்கு உள்ள "உட்”, என்ற பெயரைப் போல; ஆழமான மதப்பற்றிலும் கடவுட் பகுதியிலும் சிறப்புடையப் பற்றாளர்:


வில்லியம் உட், எமிலி மோரிஸ் என்ற தம்பதிகள் ரொட்டியும்-ஜாமும் போல ஒற்றுமைச் சுவையோடு வாழ்ந்து இரு ஆண்களையும், ஒரு பெண்ணையும் பெற்று வளர்த்தார்கள். இவர்களுள் அந்த பெண் குழந்தைதான் அன்னி!


மூத்த ஆண் குழந்தைக்கு ஹாரி என்று பெயர்: இணைய ஆண் குழந்தைக்கு ஆல்பிரட் என்று பெயர்: அன்னி இரு ஆண்ளுக்கும் இடையே 1847-ம் ஆண்டு பிறந்தவர்:


ஒரே பெண் குழந்தை அன்னி! வளர்ப்பிலே வளம் தானே ஓங்கும் அதனால் அப்பாவும் அம்மாவும் அன்னி மீது அளவிடற்கரிய அன்புடன் வளர்த்தார்கள்:


அழகே உருவான அன்னி ரோஜாப்பூ வண்ணம்! எவரிடமும் அன்புடன் பழகும் எழிலான சுபாவம் கறுசுதுப்பும் துடிதுடிப்பும் மிக்க.சிறுமீ; பொதுவாக அவரது நடையின் அழகைக் கண்டு அன்னியை வான்கோமி" என்றே அழைத்து மகிழ்வர் பெற்றோர்:


அன்னியின் தந்தை ஒரு டாக்டர் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்கேற்ப எலும்புருக்கி நோயால் இறந்து போன ஒருவரின் உடலை அறுத்துச் சோதனை செய்யும் டாக்டர்களுக்கு உதவி செய்திட அவர்களுடன் சேர்ந்து வில்லியமும் ஈடுபட்டார்.


செத்த எலும்புருக்கி நோயாளியின் எலும்பு ஒன்று வில்லியம் விரலில் ஒன்றை வெட்டிவிட்டது. உடனே தொற்றக் கூடிய நோயல்லவா அந்த நோய்?