பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7


அதற்கு உடனே மருந்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், வில்லியம் அந்த சிகிச்சை அலட்சியம் செய்ததால், கிருமிகள் அவர் உடலிலே குடியேறி பெருகி, மரணம் என்ற அளவுக்கு வந்துவிட்டது.


ஆறுவாரம் கூட வில்லியம் உயிரோடு இருக்கவில்லை! பாவம் எலும்புருக்கி எமன் வில்லியம் உயிரைப் பறித்து விட்டது. அருமை மகளையும் அன்பு மனைவியையும், மற்ற இரு சிறுவர்களையும் தவிக்கவிட்டுவிட்டு அவர் இயேசு திருவடி சேர்ந்து விட்டார்.


கணவனைப் பறிகொடுத்த எமிலி கதறினார்; அழுதார் புரண்டார்; ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ ஒளவை கேட்டது கேள்வியாக நின்று விட்டது பாவம் மயங்கி வீழ்ந்தாள் எமிலி' சிகிச்சை கொடுக்கப்பட்ட்து அவருக்கு:


அன்னி சிறு வயது பெண் தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; தந்தையின் மரணம் என்ன என்றே புரியாமல் தாய் முகத்தையே பார்த்துப் பார்த்து விம்மினார்:


தாயிக்கு ஆறுதலாக இருந்த இளையவன் ஆல்பிரட் நோயாகப் படுத்தான்! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப எமிலி கொடுத்த சிகிச்சை பால் ஆல்பிரட் உயிர் பெற்று எழவில்லை! ஒருநாள் அவனும் தந்தை சுவடுகள் மீதே கால்வைத்து இறந்து போனான்-பாவம்!


சவப்பெட்டியிலே வைக்கப்பட்டிருந்த தம்பிக்கு அன்னி முத்தமிட்டாள்: எமிலி கண்ணிர் விட்டுக் கதறினாள்! சுற்றத்தாரும் ஐயோ பாவமே, என்று பதறினார்கள் வில்லியம் வீடு பார்ப்பதற்கே சோகமாகக் கிடந்தது! ஒரு தலைவன் இல்லாத வீடு எப்படியானது பார்த்தீர்கனா